விர்ச்சுவல் முறையில் நடக்க உள்ள சர்வதேச ‘இ-கால்பந்து’ போட்டியில் இந்திய அணி கேப்டனாக எஸ்ஆர்எம் மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் லாசான் நகரில் உள்ள சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டு கூட்டமைப்பு (FISU) சார்பில் ஜூலை 6-ம் தேதி (இன்று) தொடங்கி 16-ம் தேதி வரை இப்போட்டி நடத்தப்படுகிறது. FIFA 20 களத்தில் விர்ச்சுவல் முறையில் நடக்க உள்ள இப்போட்டியில் பல்வேறு நாடுகளின் அணிகளும் போட்டியிடுகின்றன.
இதில், இந்திய அணியின் கேப்டனாக சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் எம்.டெக்.(ஐ.டி.) 2-ம் ஆண்டு மாணவர் உல்லாஷ்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
‘‘இ-விளையாட்டு களத்தில் இந்திய அணிக்கு தலைமை வகிப்பது பெருமை. இதற்காக என்னை ஆதரித்து வழிநடத்திய எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிர்வாகம், விளையாட்டுத் துறை பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு நன்றி. சக வீரர்களுடன் திறமையாக விளையாடி, பட்டத்தை வெல்வோம்’’ என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago