மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். அவரை எதிர்த்து விளையாடிய ஜப்பானின் நிஷிகோரி காயம் காரணமாக வெளியேறினார். இதனால் எவ்வித பிரச்சினையுமின்றி மாட்ரிட் மாஸ்டர்ஸில் 4-வது பட்டத்தைக் கைப்பற்றினார் நடால்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் வென்ற நிஷிகோரி, 2-வது செட்டில் என்ற 4-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது அவருக்கு முதுகுப் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சரிவுக்குள்ளான நிஷிகோரி 4-6 என்ற கணக்கில் 2-வது செட்டை இழந்தார். இதை சரியாகப் பயன்படுத்திய நடால், அடுத்த செட்டில் அபாரமாக ஆடினார். அவர் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோது, போட்டியிலிருந்து விலகினார் நிஷிகோரி.
இதனால் வெற்றி பெற்று சாம்பியனான நடால், இதுவரை நிஷிகோரிக்கு எதிராக ஆடிய 7 ஆட்டங்களிலும் வாகை சூடியிருக்கிறார். தனது டென்னிஸ் வாழ்க்கையில் மாஸ்டர்ஸ் (ஏடிபி 1000) போட்டியில் 27-வது முறையாக பட்டம் வென்றுள்ள நடால், ஒட்டுமொத்தத்தில் 63-வது பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago