2019 உலகக்கோப்பைப் போட்டித் தொடரில் ஹை -வோல்டேஜ் என்று உசுப்பேத்தப்பட்டு லோ-வோல்டேஜை விடவும் கீழாக பிசுபிசுத்துப் போன இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முந்தைய நாள் நடந்த சம்பவம் ஒன்றை இந்திய அணியின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் நினைவுகூர்ந்தார்.
பாரத் ஆர்மி மின்னணு வலையொலிப்பதிவில் பேசிய விஜய் சங்கர், “வீரர்களில் நாங்கள் ஒரு சிலர் காஃபி ஷாப்புக்குச் சென்றோம். அதாவது மறுநாள் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டி. அப்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் எங்களிடம் வந்து அத்துமீறி வார்த்தைகளை விட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் எனக்கு புரிந்தது இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் என்னவென்று.
நாங்கள் பதில் எதுவும் சொல்லாமல் அவர் ஏச்சையும் பேச்சையும் ஏற்றுக் கொண்டோம். எங்களை கண்டபடி ஏசினார், அனைத்தையும் ரெக்கார்ட் செய்தார். அவர் என்னதான் செய்கிறார் என்பதை நாங்கள் பேசாமல் கவனித்தோம். அதனை மறக்க முடியாது.
ஒரு நாளுக்கு முன்னதாகவே நான் அணியில் இருக்கிறேன் என்று கூறினார்கள்.” என்றார்.
» சாத்தான்குளம் குரூரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கலங்கிவிட்டேன்: ஷிகர் தவண்
» கிரிக்கெட் ஆடுவதற்கென்றே பிறந்த வீரர்கள்: 1983 உ.கோப்பை வென்ற ‘கபில்ஸ் டெவில்ஸ்’ பற்றி ஸ்ரீகாந்த்
ஷிகர் தவணுக்குப் பதில் சேர்க்கப்பட்ட விஜய் சங்கர் பின்னால் இறஙி 15 ரன்களை குறைந்த பந்துகளில் எடுத்தார் இந்திய அணி 336/5 என்ற பெரிய இலக்கை எட்டியது. பவுலிங்கில் முதல் பந்திலேயே அறிமுகப் போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய சாதனையைப் படைத்தார் விஜய் சங்கர். உலகக்கோப்பை தொடரில் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்த 3வது அறிமுக வீரர் என்ற பட்டியலிலும் இணைந்தார் விஜய் சங்கர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago