இந்திய லெக்ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா அனைத்து கால சிறந்த டெஸ்ட் அணியைத் தேர்வு செய்துள்ளார். இதில் பெரிய அதிர்ச்சி என்னவெனில் அந்த அணியில் ராகுல் திராவிட், தோனி, நடப்பு நம்பர் 1 பேட்ஸ்மென் விராட் கோலி ஆகியோர் இடம்பெறவில்லை என்பதே.
ஆனால் சச்சின் டெண்டுல்கர், சேவாக், கபில்தேவ் ஆகியோரை தனது ஆல்டைம் டெஸ்ட் அணியில் சேர்த்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வில் பியூஷ் சாவ்லா இந்த அணியை அறிவித்தார். இந்திய அணிக்காக இவர் 3 டெஸ்ட்களே ஆட முடிந்தது, 25 ஒருநாள் போட்டிகள், 7 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடியுள்ளார்.
ஐபிஎல் 2020 ஏலத்தில் தோனி தலைமை சிஎஸ்கே அணி இவரை ரூ.6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இந்நிலையில் இவர் தன் ஆல்டைம் கிரேட் டெஸ்ட் அணியைத் தேர்வு செய்துள்ளார், அதில் தாக்கம் செலுத்தும் சேவாக், கில்கிறிஸ்ட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரைச் சேர்த்துள்ளார்.
சேவாக், மேத்யூ ஹெய்டன் ஆகியோரைத் தொடக்க வீரர்களாக அவர் தேர்வு செய்துள்ளார்.மிடில் ஆர்டரை சச்சின், ரிக்கி பாண்டிங், மிடில் ஆர்டரை ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர் அலங்கரிக்கின்றனர். விக்கெட் கீப்பராக ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆல்ரவுண்டர் பொறுப்புக்கு கபில்தேவைத் தேர்வு செய்து ஜாக் காலீஸை 12வது வீரராக்கியுள்ளார் சாவ்லா. பவுலிங்கில் வாசிம் அக்ரம், ஷேன்வார்ன், முத்தையா முரளிதரன், கர்ட்லி ஆம்புரோஸ் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.
பியூஷ் சாவ்லாவின் ஆல் டைம் கிரேட் டெஸ்ட் அணி வருமாறு:
விரேந்திர சேவாக், மேத்யூ ஹெய்டன், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஆடம் கில்கிறிஸ்ட், கபில்தேவ், வாசிம் அக்ரம், ஷேன் வார்ன், முரளிதரன், ஆம்புரோஸ், ஜாக் காலிஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago