கொல்கத்தாவில் வரும் 14-ம் தேதி நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
மே 16-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருப்பதால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என காவல்துறை தெரிவித்துவிட்டதால் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த முதல் ஆட்டம் அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க இணைச் செயலர் சுபிர் கங்குலி கூறியதாவது: போட்டியை இங்கு நடத்த எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி மேற்கொண்டோம். ஆனால் போலீஸார் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என போலீஸ் கமிஷனர் தெரிவித்துவிட்டார் என்றார்.
இந்த சீசனில் கொல்கத்தாவில் 4 போட்டிகள் மட்டுமே நடைபெறவிருந்தன. இப்போது முதல் போட்டி கட்டக்கிற்கு மாற்றப்பட்டுவிட்டது. எஞ்சிய மூன்று போட்டிகள் மே 20, 22, 24 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago