ஐசிசி சேர்மனாக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வாகிறார்? - போட்டியிலிருந்து பாக். ஈசான் மானி விலகல்

By செய்திப்பிரிவு

ஐசிசி சேர்மனாக இந்தியாவின் சஷாங்க் மனோகர் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஜூலை வரை உள்ளது, இந்நிலையில் அடுத்த ஐசிசி சேர்மன் பதவிக்கான போட்டியில் பாகிஸ்தனின் ஈசான் மானி இருந்தார். தற்போது இவர் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்ததால் கங்குலி போட்டியின்றி அடுத்த ஐசிசி சேர்மனாவார் என்று ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஈசான் மானி கூறும்போது, “சேர்மன் பதவி போட்டியில் நான் இல்லை. என்னைப் போட்டியிடுமாறு இந்தியவிலிருந்து சிலர் கேட்டுக் கொண்டனர், ஆனால் எனக்கு ஆர்வமில்லை.

கங்குலி போட்டியிடுகிறாரா என்பது பற்றி எனக்குத் தெரியாது 2006-ல் என் பதவிக்காலம் முடிந்தவுடனேயே ஐசிசி பக்கம் போகக்கூடாது என்று முடிவெடுத்தேன். அப்போது நான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டேன், இப்போது இம்ரான் கான் என்னை பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு சேவையாற்றுமாறு கேட்டுக் கொண்டார், அதனால் ஐசிசி பதவிப் போட்டியில் நான் இல்லை” என்றார்.

இதனையடுத்து ஐசிசி சேர்மன் பதவிக்கு சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

முறைப்படி ஐசிசி தேர்தல் அறிவித்தால் இது தொடர்பாக அறிவிப்போம் என்று பிசிசிஐ அதிகாரி அருண் துமால் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்