இனிமையான, படித்த, வெற்றிகரமான ஒரு கடின உழைப்பாளியை இழந்துவிட்டோம்: சுஷாந்த் மரணம் குறித்து கிரிக்கெட் வீரர் கிரண் மோரே இரங்கல்

By பிடிஐ

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் நம்ப முடியாத ஒரு பயணத்தைப் பாதியில் துண்டித்துள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று (14.06.20) தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34.

2016-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படத்தில் தோனி கதாபாத்திரத்தில் சுஷாந்த் நடித்திருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு சுஷாந்தை தேசிய அளவில் பிரபலமாக்கியது. இந்தப் படத்தில் தோனியைப் போல கிரிக்கெட் ஆடக் கற்றுக்கொள்ள, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரேவிடம் சுஷாந்த் 9 மாதங்கள் பயிற்சி பெற்றார்.

இந்நிலையில் சுஷாந்த் மரணம் குறித்து கிரண் மோரே கூறுகையில், "அதிர்ச்சி, நம்ப முடியாத நிலை. இந்த இரண்டும்தான் எனக்கு சட்டெனத் தோன்றிய உணர்வுகள். அவ்வளவு இளம் திறமைசாலியுடன் பணியாற்றியுள்ள எனக்கு, ஏன் அவர் இந்த முடிவை எடுத்தார் என்ற கேள்வியே தோன்றியது. நாம் இனிமையான, படித்த, வெற்றிகரமான ஒரு கடின உழைப்பாளியை இழந்துவிட்டோம்" என்று கூறியுள்ளார்.

மேலும் சுஷாந்தின் பயிற்சிக் காலம் குறித்து நினைவுகூர்ந்துள்ள மோரே, "மிகவும் ஈடுபாட்டுடன், ஒரு கிரிக்கெட் வீரரைப் போலவே பயிற்சி பெற்றார். 9 மாதங்கள் இடைவிடாது பயிற்சி பெற்றார். தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை சிறப்பாகக் கற்றுக்கொண்டார். விக்கெட் கீப்பிங் செய்வது முற்றிலும் வித்தியாசமான விஷயம். பலமுறை அவரது கைகள், தொடை என அடிபட்டது. ஆனால் பயிற்சி முடிந்தபோது அவர் விளையாடத் தயாராக இருந்தார்.

அவருடையது ஒரு நம்ப முடியாத பயணம், பாதியில் வெட்டப்பட்டுள்ளது. மனரீதியாக நாம் வலுவாக இருக்க வேண்டும். குறிப்பாக இப்போதைய சூழலில். நமது நண்பர்கள், குடும்பத்துடன் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும். அதுவும் தனியாகத் தங்குபவர்களுக்கு இது மிகவும் முக்கியம். நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு விஷயத்தில் நாம் ஈடுபட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்