ஜூன் 10ம் தேதியான இன்றைய தினத்தில்தான் 2019ம் ஆண்டு இந்தியாவின் பிரமாதமான இடது கை அதிரடி வீரர் ஸ்டைலிஷ் யுவராஜ் சிங் அனைத்து வகைக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்து தன் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினார்.
ஏறத்தாழ 20 ஆண்டுகள் இந்திய அணிக்காக பேட்டிங், பீல்டிங், பவுலிங் என்று அசத்தி 2011 உலகக்கோப்பையை வெல்ல பெரும் பங்காற்றி தொடர் நாயகன் விருதைப் பெற்றவர்.
2007 டி20 உலகக்கோப்பையில் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து மேற்கிந்திய மேதை கேரி சோபர்சின் இந்திய வடிவம் தான் என்பதைக் காட்டினார்.
அவரது ஆட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் எந்த ஒரு பந்தாவும் இல்லாத அளவுக்கு அதிரடி ஆக்ரோஷம் இருக்கும். பவர் ஹிட்டர் ஆனால் பவர் ஹிட்டிங் போல் தெரியாது.
304 ஒருநாள் போட்டிகள் 58 டி20 சர்வதேச போட்டிகள் 40 டெஸ்ட் போட்டிகள் என்று வலுவான ஒரு கரியரை அவர் இந்தியாவுக்காக ஆடியுள்ளார். பேட்டிங்கில் பினிஷிங், பீல்டிங்கில் கேட்சிங் மற்றும் மின்னல் வேக தடுப்பு அல்லது தனது ஸ்பின் பவுலிங் இப்படி ஏதாவது ஒன்றில் அசத்தி அணிக்கு வெற்றி தேடித்தந்திருப்பவர்.
நைரோபியில் அத்தனை இளம் வயதில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பவுலர்களை யுவராஜ் பந்தாடியதை மறக்க முடியுமா? பவுலிங்கில் டைட்டாக வீசியதால் அந்தப் போட்டியில் அவர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அவருக்குப் பிடித்த அணியாக இருக்கும் ஏனெனில் தான் அடித்த 3 சதங்களுமே பாகிஸ்தானுக்கு எதிராகவே அவர் அடித்தார். முதல் சதம் லாஹூரில் கிரீன் டாப் விக்கெட்டில் 2004ல் அடித்த சதம், 2வது 2006-ல் கராச்சியில், 169 ரன்களை பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை டெஸ்ட்டில் இந்தியாவுக்கு 221 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் கங்குலி, சேவாகுடம் யுவராஜ் சிங்கை தைரியமாக தொடக்க வீரராக இறக்கினார், முதல் நாள் இறுதியில் நாட் அவுட்டாக இருந்தார் யுவராஜ், கடைசியில் முழுதும் நாட் அவுட் தான், காரணம் மறுநாள் மழை காரணமாக ஆட்டம் நடக்கவே இல்லை டெஸ்ட் ட்ரா ஆனது. இந்தப் போட்டி மட்டும் நடந்து இவரும் சேவாகும் சேர்ந்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தரும் பங்களிப்பு நிகழ்ந்திருந்தால் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக இவர் கலக்கியிருக்கவும் கூடும். அங்குதான் அவர் அதிர்ஷ்டம் இல்லாமல் போனார்.
2011 உலகக்கோப்பையில் இவர் 300 ரன்கள் 15 விக்கெட்டுகள் என்று சாதனை படைத்து ஆல்ரவுண்டர் என்ற தகுதியில் ஒரு படி மேலே போனார். இதில் 4 ஆட்ட நாயகன் விருது அடங்கும்.
பெரிய போராட்டக்காரரான யுவராஜ் சிங் புற்றுநோயை எதிர்த்துப் போராடி மீண்டு வந்து இந்திய அணிக்காக ஆடினார்.
ஆனால் இவர் மீது ரசிகர்கள் கோபமடைந்த தருணம் என்னவென்றால் 2014 டி20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிராக 21 பந்துகளில் 11 ரன்கள் என்று பந்தைத் தேடியதுதான். அவரே அப்போது கூறினார், ‘இந்த இன்னிங்ஸுக்கு பிறகு என் கதை முடிந்தது என்றே நினைத்தேன், அனைவரும் என்னை திட்டித் தீர்த்தனர். ஆனால் என் மீதான நம்பிக்கையை நான் இழக்கவில்லை.’ என்ற யுவராஜ் சிங் அதன் பிறகு 2019-ல்தான் ஓய்வு அறிவித்தார்.
அனைத்து வடிவங்களிலும் சர்வதேச போட்டிகளில் 11,778 ரன்களை எடுத்துள்ளார் யுவராஜ் சிங். 148 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்லார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
6 days ago
விளையாட்டு
6 days ago