சாஹலை சாதிரீதியாக இழிவுபடுத்தியதாக சர்ச்சை: யுவராஜ் சிங் வருத்தம்

By செய்திப்பிரிவு

இந்திய லெக் ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹலை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாக எழுந்த விவகாரத்தில் யுவராஜ் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஸ்பான்சர்டு பதிவுகள் மூலம் வீரர்கள் கரோன லாக் டவுன் காலத்திலும் சம்பாதித்து வருகிறார்கள், வெறுமனே கருத்துப்போடுவதென்றால் ட்விட்டரைப் பயன்படுத்தலாம், ஆனால் ஸ்பான்சர்டு பதிவுகள் மூலம் சம்பாதிக்க வேண்டுமென்றால் இன்ஸ்டாகிராம்தான் சரிப்பட்டு வரும், இதிலும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினால் மவுசு அதிகம்.

அந்த விதத்தில் ரோஹித் சர்மா, யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் உரையாடும் போது லெக்ஸ்பின்னர் சாஹலின் டிக்டாக் ஆர்வம் பற்றி உரையாடினார்கள். இதில் யுவராஜ் சிங் பயன்படுத்திய வார்த்தை ஒன்று தவறுதலாக சாதிரீதியான தாக்குதல் என்ற சர்ச்சை எழுந்தது.

சாஹலை இழிவுபடுத்தியதாக யுவராஜ் சிங் மீது காவல் துறையில் புகார் அளித்தார் வழக்கறிஞர் ஒருவர். காவல்துறையும் விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தது

இந்நிலையில் தான் கூறியது பற்றி வருத்தம் தெரிவிக்கும் தொனியில் யுவராஜ் சிங் கூறியதாவது:

சாதி, மதம், நிறம், பாலினம் என்ற எந்த ஒரு பேதத்தையும் உயர்வு தாழ்வையும் நாம் ஒரு போதும் நம்பியதில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

என் பேச்சு தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இது தேவையற்றது. மக்களின் நலன்களுக்காக என் வாழ்வை நான் செலவிட்டு வருகிறேன். வாழ்க்கையின் மீதான கண்ணியத்தை பெரிதும் மதிக்கிறேன். எந்த ஒரு தனிநபரையும் விதிவிலக்கின்றி மதிக்கிறேன்.

இருந்தாலும் ஒரு பொறுப்புள்ள இந்தியனாக என்னையும் அறியாமல் நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். இந்தியாவின் மீதும் இதன் மக்கள் மீதும் ஆன என் அன்பு மாறாதது.

இவ்வாறு தெரிவித்தார் யுவராஜ் சிங்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்