முன்னாள் இந்திய வீரரும் ஸ்டைலிஷ் பேட்ஸ்மெனுமான விவிஎஸ் லஷ்மண், தன்னை வெகுவாக உத்வேகப்படுத்திய சக வீரர்களுக்கு வரிசையாகப் புகழாரம் சூட்டி வருகிறார், அந்த வரிசையில் ராகுல் திராவிட் பற்றி விவிஎஸ் லஷ்மண் புகழ்ந்து பதிவு செய்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் திராவிட் பற்றி விவிஎஸ் லஷ்மண் கூறியதாவது:
ஆட்டத்தின் உறுதிப்ப்பாடுடைய மாணவர். அணிக்கான வீரர். எந்த ஒரு சவாலையும் அர்ப்பணிப்புணர்வுடன் எதிர்கொள்வார், தன்னால் முடியாது என்று கூறக்கூடிய இடத்தில் இருந்தாலும் அணிக்காக விக்கெட் கீப்பிங்கையும் செய்ய ஒப்புக் கொண்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராகக் களமிறங்கியுள்ளார். இவை அனைத்தையும் விடாமுயற்சியுடன் அவர் செய்தார்.
இவ்வாறு கூறியுள்ளார் விவிஎஸ். லஷ்மண்.
ராகுல் திராவிட் புகழ்பெற்ற கொல்கத்தா டெஸ்ட் 2001-ல் லஷ்மணுடன் இணைந்து ஒரு 300 கூட்டணியையும் பிறகு சேவாகுடன் பாகிஸ்தானில் தொடக்க வீரராக இறங்கி 400 கூட்டணியும் அமைத்தவர், இந்த வகையில் இரண்டு 300+ கூட்டணிக்குச் சொந்தக்காரர் என்ற சாதனைய நிகழ்த்தியவர் ராகுல் திராவிட். 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒருநாள் போட்டிகளில் ராகுல் திராவிட் ஆடியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago