இவ்வளவு கொடூரமானவனா மனிதன்? கேரளாவில் கருவுற்ற யானை கொல்லப்பட்டதற்கு கோலி, ரெய்னா வேதனை

By செய்திப்பிரிவு

கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்த 15 வயதான கருவுற்ற யானை, உணவு தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சென்றது. அந்த கிராம மக்கள் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர்.

ஆனால் சில விஷமிகள், அன்னாசி பழத்தில் பட்டாசை மறைத்து வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். அதை யானை சாப்பிட்டபோது பட்டாசு வெடித்து சிதறியது. இதில் யானையின் நாக்கு, வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியில் அலறி துடித்த கருவுற்ற யானை அங்கும் இங்கும் ஓடி, அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது.

தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 2 கும்கி யானைகளின் உதவியுடன் கருவுற்ற யானையை மீட்டனர். கால்நடை மருத்துவர்கள் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடந்த 27-ம் தேதி மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்தது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சமூகவலைத்தளத்தில், ‘கேரளாவில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. நம் விலங்குகளை நாம் அன்புடனுன் கருணையுடனும் நடத்துவோம் இத்தகைய கோழைத்தனமான செய்கைகளை முடிவுக்கு கொண்டுவருவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னா: மனித கொடூர குணத்தின் இன்னொரு வெட்கங்கெட்ட செயல். விலங்குகளிடம் அன்பு செலுத்தினால் நாம் ஒன்றும் குறைந்து போக மாட்டோம். அன்னாசிப் பழத்தில் வெடி வைத்து அப்பாவி யானையைக் கொன்ற குற்றவாளிகளுக்கு கேரளா முதல்வர் கடும் தண்டனை அளிக்க வேண்டும.

ரிஷப் பந்த்: இதயம் உடைந்து விட்டது, வார்த்தைகளே வரவில்லை. கோபம், அதிர்ச்சி. இப்படியுமா ஒருவர் கொடூரமாக இருக்க முடியும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்

சுனில் சேத்ரி, குல்தீப் யாதவ் ஆகிய விளையாட்டு வீரர்களும் தங்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்