கொழும்புவில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை வாரியத் தலைவர் அணியை 121 ரன்களுக்குச் சுருட்டி இந்திய அணி 230 ரன்கள் முன்னிலை பெற்றது. இசாந்த் சர்மா 7 ஓவர்கள் 1 மெய்டன் 23 ரன்கள் 5 விக்கெட்டுகள் என்று அபாரமாக பந்துவீசினார்.
இதனையடுத்து தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிவரும் இந்திய அணியில், தொடக்க வீரர்களாக ’தங்கள் பார்முக்காக சற்றும் மனம் தளராது போராடி வரும்’ விராட் கோலி, ரோஹித் சர்மா களமிறங்கி ஏமாற்றமளித்தனர்..
20 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்திருந்த போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் விஸ்வ திலினா பெர்ணாண்டோவிடம் எல்.பி.ஆகி வெளியேறினார். முதல் இன்னிங்ஸிலும் 7 ரன்களில் ரோஹித் ஏமாற்றமளித்தது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 34 பந்துகளைச் சந்தித்து 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸில் அவுட் ஆன அதே ரஜிதாவிடம் ஆட்டமிழந்தார். பதிரானா என்பவரிடம் கேட்ச் கொடுத்து 2-வது இன்னிங்ஸிலும் ஏமாற்றமளித்தார் விராட் கோலி.
இடையில் விருத்திமான் சஹா 1 ரன்னில் பெர்ணாண்டோவின் பந்தில் எல்.பி.ஆனார். 28/3 என்று சொதப்பி வரும் நிலையில் புஜாரா, கே.எல்.ராகுல் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 351 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இலங்கை வாரியத் தலைவர் அணி தொடக்கத்தில் இசாந்த் சர்மா வேகத்துக்கு 10 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் அதன் பிறகு சிரிவர்தனா (32), டிக்வெல்லா (41), குணதிலக (28) ஆகியோர் பங்களிப்பு செய்ய 121 ரன்கள் எடுத்தது. இசாந்த் தவிர இந்திய தரப்பில் வருண் ஆரோன், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஹர்பஜன் சிங் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago