2000-ம் ஆண்டு உலகை உலுக்கிய, ஹேன்சி குரோனியே சிக்கிய கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தொடர்புடைய தரகர் சஞ்சீவ் சாவ்லா, அனைத்துக் கிரிக்கெட் போட்டிகளும் பிக்சிங் செய்யப்பட்டதுதான் என்ற திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார்.
டெல்லி போலீஸுக்கு இவர் அளித்த வாக்குமூல அறிக்கையில், “எந்த ஒரு கிரிக்கெட் போட்டியும் நியாயமாக நடப்பதில்லை, மக்கள் பார்த்த அனைத்து மேட்ச்களும் பிக்சிங் செய்யப்பட்டவைதான்” என்று கூறியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் போட்டிகள் திரைப்படங்கள் போல் வேறு ஒருவரால் இயக்கப்படுவடுதான் என்றும் கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தான் ரொம்ப வருடங்களாக இந்த சூதாட்டத் தொழில் செய்து வருவதாகவும், ஆனால் தன்னால் பெயர்கள் எதையும் கூற முடியாது ஏனெனில் இது பெரிய சிண்டிகேட், லாபி, நிழலுலக தாதாக்கள் ஈடுபடும் தொழில், அவர்களைப் பற்றி தான் வாயைத் திறந்தால் கொல்லபடுவேன் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார் சஞ்சய் சாவ்லா.
விசாரணை காவலதிகாரி டிசிபி கிரைம் பிராஞ்ச் ஜி.ராம்கோபால் நாயக் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக இன்னொரு குண்டையும் போட்டுள்ளார் சஞ்சய் சாவ்லா.
திஹார் ஜெயலில் இருக்கும் சாவ்லா மார்ச் 28ம் தேதி கரோனா காரணமாக ஜாமீனுக்கு மனு செய்திருந்தார். ஆனால் டெல்லி கோர்ட் அதை நிராகரித்து விட்டது. ஆனால் இந்த மாதத் தொடக்கத்தில் சாவ்லாவுக்கு ஜாமீன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago