மும்பையை அமைதியாக வென்றது கொல்கத்தா

By செய்திப்பிரிவு





துவக்க வீரராக களமிறங்கிய உத்தப்பா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிக்கு வழிநடத்திச் சென்றார். 52 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் அவர் 80 ரன்களைக் குவித்தார். மற்றொரு துவக்க வீரர் காம்பீர் 14 ரன்களுக்கு 8-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். பாண்டேவும் ஹர்பஜன் சிங் வீசிய பந்தில் 14 ரன்களுக்கு பவுல்டானார்.

16-வது ஓவரின் முடிவில் கொல்கத்தா 116 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 4 ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் யூசுப் பதான் மற்றும் ஷகிப் அல் ஹசன் இணை பதட்டமின்றி ரன் சேர்த்தனர். வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவை என்றிருந்தபோது ஷகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே பதான் பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை அடைந்தார்.

இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த போட்டியை வென்ற கொல்கத்தா ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பையும் இப்போதைக்கு தக்கவைத்துக் கொண்டது.

முன்னதாக டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. ஆரம்பம் முதலே மந்தமாக ஆடி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி பவர்ப்ளேவின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களை எடுத்திருந்தது. நன்றாகப் பந்துவீசிய கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் எந்த கட்டத்திலும் எதிரணியை ஆதிக்கம் செலுத்த விடாமல் கட்டுப்படுத்தினர்.

துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் மற்றும் கவுதம், முறையே 12 மற்றும் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிவந்த ராயுடு 12-வது ஓவரில் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் ஆண்டர்சன் இந்த போட்டியிலும் அதிக ரன் சேர்க்காமல் ஆட்டமிழந்து (18 ரன்கள்) ஏமாற்றமளித்தார். மறுமுனையில் தாக்குப்பிடித்த ரோஹித் சர்மா 43 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஆண்டர்சனைத் தொடர்ந்து களமிறங்கிய பொல்லார்ட் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்த தவறினார்.

20-வது ஓவரில் சுனில் நரைன், ரோஹித் சர்மாவை 51 ரன்களுக்கு பெவிலியன் அனுப்பினார். அந்த ஓவரில் மேலும் 3 ரன்கள் மட்டுமே வர இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களுடன் மும்பை தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது. சிறப்பாக பந்து வீசிய சுனில் நரைன் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே தந்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்