கோலி போல வருமா.. ஸ்டீவ் ஸ்மித் கோலியின் அருகில் கூட நிற்க முடியாது: கெவின் பீட்டர்சன் புகழாரம்

By ஏஎன்ஐ

சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை விட கோலிதான் சிறந்த பேட்ஸ்மென் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டனான கெவின் பீட்டர்சன் தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராமில் ஜிம்பாப்வே முன்னாள் வீரர் பொம்மி மபாங்வாவுடன் அவர் உரையாடினார் அப்போது கூறியதாவது:

கோலி இந்திய அணிக்காக போட்டிகளை வெற்றி பெற்றுக் கொடுப்பதாகட்டும் இந்தியாவுக்கு ஆடுவதால் அவருக்கு கேப்டனாகவும் வீரராகவும் இருக்கும் அழுத்தங்களாகட்டும் அனைத்திற்கும் மேலாக சாதனைகளை அவர் விரட்டுவது போன்று யாரும் விரட்டமுடியாது. எனவே ஸ்டீவ் ஸ்மித் கோலிக்கு அருகில் கூட வர முடியாது.

சச்சின் டெண்டுல்கரா கோலியா என்றாலும் விராட் தான் ஏனென்றால் அவர் சாதனைகளை, எண்ணிக்கைகளை விரட்டுகிறார். இலக்கை விரட்டுவதில் அவர் சராசரி 80 ரன்களாகும். சீராக இந்தியாவுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கிறார். ஆம், நாட்டுக்காக எத்தனை போட்டிகளை வென்று கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

இவ்வாறு கூறினார் கெவின் பீட்டர்சன்.

நிறைய வீரர்கள் ஓய்வு பெற்றவுடன் பயிற்சியாளர்களாவது உள்ளிட்ட வேலைகளை எதிர்பார்க்கின்றனர், அதுவும் பணமழை ஐபிஎல் கிரிக்கெட்டை குறிவைத்து தோனி, கோலி, ரோஹித் சர்மா என்று புகழாரம் சூட்டி வருகின்றனர், இவர்களைப் பற்றி அவர்களின் உண்மையான கருத்தை இதை வைத்து புரிந்து கொள்ள முடியுமா? இப்போது சச்சினை புகழ்ந்து என்ன ஆகப்போகிறது? எனவே கோலியை புகழ்ந்தால் ஏதாவது காரியம் நடக்கலாம் என்று உலக முன்னாள் வீரர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கோலியை புகழ்ந்து வருவதாக ஏற்கெனவே மைக்கேல் கிளார்க் போன்றவர்கள் சூசகமாக இந்த மனநிலையை விவரித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்