ஐபிஎல் கிரிக்கெட் இன்று முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் முதல் 20 ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டன. அவை முடிவுற்ற நிலையில் சென்னை கொல்கத்தா இடை யிலான 21-வது லீக் போட்டி ராஞ்சி யில் இன்று நடைபெறவுள்ளது.
இதுவரை 5 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாபிடம் மட்டும் தோல்வியடைந்த சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி, ராஜஸ்தான், மும்பை, ஹைதராபாத் ஆகிய அணிகளை தொடர்ந்து வென்ற உற்சாகத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி யின் சொந்த ஊரான ராஞ்சியில் இப்போட்டி நடைபெறுவது கூடுதல் சிறப்பம்சம். சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ஸ்மித், மெக்கல்லம் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வெற்றியில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். தோனி, ரெய்னா, டூ பெலிஸ்ஸி உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்களும், ஜடேஜா, மன்ஹாஸ் போன்ற ஆல் ரவுண்டர்களும் பலம் சேர்க்கின்றனர், அஸ்வின், ஹில்பெனாஸ், மோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.
தொடர்ந்து 4 போட்டிகளில் வென்ற உற்சாகத்துடன் இந்தியா வில் நடைபெறும் முதல் போட்டியை வெல்லும் முனைப்புடனும் சூப்பர் கிங்ஸ் களமிறங்குகிறது.
அதே நேரத்தில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 2 வெற்றிகளையும், 3 தோல்வி களையும் சந்தித்துள்ளது. காலிஸ், கம்பீர், யூசுப் பதான், உத்தப்பா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் கொல்கத்தா அணியால் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாட முடியவில்லை. முக்கியமாக கேப்டன் கம்பீர் தொடர்ந்து 3 ஆட்டங்களில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 4-வது ஆட்டத்தில் 1 ரன் எடுத்த அவர், 5-வது ஆட்டத்தில் மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடி 44 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் சுநீல் நரைன், மோர்ன் மோர்கல், உமேஷ் யாதவ் ஆகியோர் கொல்கத்தா அணிக்கு வலு சேர்க்கின்றனர்.
போட்டி நேரம் : இரவு 8, நேரடி ஒளிபரப்பு : சோனி சிக்ஸ் / செட் மேக்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago