சென்னை லீக்: சிட்டி போலீஸ் முதல் வெற்றி

By ஏ.வி.பெருமாள்

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து .போட்டியில் சென்னை சிட்டி போலீஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சாய் அணியைத் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை லீக்கில் முதல் வெற்றியைப் பதிவு செய்த சிட்டி போலீஸ், 5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சென்னை நேரு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிட்டி போலீஸ் அணிக்கு அதன் ‘லெப்ட் விங்கர்’ ஜெரால்டு பேப்லஸால் இரு கோல் வாய்ப்புகள் நழுவின. 25-வது நிமிடத்தில் ‘ரைட் விங்கர்’ உதயகுமார் கொடுத்த ‘கிராஸை’ வீணடித்த ஜெரால்டு, அடுத்த சில நிமிடங்களில் கிடைத்த மற்றொரு கோல் வாய்ப்பை கோட்டைவிட்டார்.

அதேநேரத்தில் சாய் அணிக்கு அதன் மிட்பீல்டர் ராஜீவனின் அபார ஆட்டம் மிகப்பெரிய பலமாக இருந்தது என்றாலும், மற்ற வீரர்கள் பெரிய அளவில் முயற்சி எடுக்காதது பலவீனமாக அமைந்தது. ராஜீவன் 40 ‘யார்ட்’ தூரத்தில் இருந்து கோல் கம்பத்தை நோக்கி அடித்த அதிவேக ஷாட்டை அற்புதமாகத் தகர்த்தார் சிட்டி போலீஸ் கோல் கீப்பர் ஞானசேகரன்.

முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிய, பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இடதுபுறத்தில் இருந்து ராஜீவன் அடித்த மற்றொரு அற்பதமான ஷாட்டையும் ஞானசேகரன் முறியடிக்க, சாய் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் சாய் வீரர் விவேக், சிட்டி போலீஸ் ‘மிட்பீல்டர்’ சிவாவை கீழே தள்ள, விவேக்கிற்கு ‘யெல்லோ கார்டு’ கொடுத்த நடுவர், சிட்டி போலீஸ் அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பை வழங்கினார்.

கார்னர் கிக் வாய்ப்பில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய மோகன் பந்தை உதைக்க, கோல் கம்பத்தின் இடதுபுறத்தில் இருந்த ‘ரைட் விங்கர்’ உதயகுமார் கோலாக்கினார். இதன்பிறகு கோலடிக்க தீவிரம் காட்டிய சாய் அணி, கோல் கீப்பர் திவாகரை முன்கள வீரராக மாற்றிப் பார்த்தும் பலனில்லாமல் போகவே, சிட்டி போலீஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. சாய் அணி தோற்றபோதும், மிக அபாரமாக ஆடிய அந்த அணியின் ராஜீவன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து 7-வது தோல்வியை சந்தித்துள்ள சாய் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக் போட்டியில் வருமான வரித்துறை அணி 2-1 என்ற கோல் கணக்கில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் அணியைத் தோற்கடித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்