ஒவ்வொரு நாளும் அம்மா மருத்துவமனைக்குச் செல்லும் போதும் பதட்டம் ஏற்படுகிறது: இளம் செஸ் வீரர் குகேஷ் உருக்கம்

By செய்திப்பிரிவு

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டம் பெற்றவர் தமிழக செஸ் வீரர் குகேஷ். இவரது அம்மா பத்மா நுண்ணுயிரியலாளர். தற்போது கரோனா வைரஸ் சாம்பிள்கள் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மிகவும் ரிஸ்க் ஆன இந்த வேலையில் அவரது தாயார் அர்ப்பணிப்புடன் செயல்படுவது குறித்து குகேஷ் கூறும்போது, “என் அம்மா ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்லும் போது பதட்டம் ஏற்படுகிறது.

லீவு எடுக்கலாமே அம்மா என்பேன், ஆனால் இப்போதைய சூழலில் முடியாத காரியம் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவர் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் ஒரு மகன் என்ற முறையில் அவருக்கு உதவி செய்ய முடியாததை நினைத்துக் கவலைப்படுகிறேன்.

என் அம்மா எப்போதும் அமைதியானவர். கடினமான நேரத்தில் அவர் நிதானமாக செயல்படுவது எனக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது, அவரது பணிகள் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்