2018-ல் தென் ஆப்பிரிக்கப் பயணத்தின் போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பெரிய கரும்புள்ளி விழுந்தது, பந்தைச் சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் தடை செய்யப்பட்டனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையே இது உலுக்கி எடுத்து இன்னமும் கூட ஆஸி.யினால் இதன் விளைவுகளிலிருந்து மீள முடியவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியுமே பால்டேம்பரிங்கில் ஈடுபட்டுள்ளது, ஸ்டீவ் ஸ்மித் பழியை ஏற்றுக் கொண்டார் அவ்வளவே என்று கூறியுள்ளார்.
டாக்ஸ்போர்ட்சுக்கு பிளிண்டாஃப் கூறும்போது, “ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் இதில் இல்லை என்று கூறுவதற்கில்லை. ஒரு பவுலராக ஒருவர் பந்தை என்னிடம் அளிக்கும் போதே எனக்கு தெரிந்து விடும், பந்து சேதம் செய்யப்பட்டுள்ளது என்பது. அனைவருக்குமாகவும் ஸ்டீவ் ஸ்மித் பழியைச் சுமந்தார், ஒட்டுமொத்த அணியுமே இதில் ஈடுபட்டுள்ளனர்.
பந்தைச் சேதம் செய்வது என்பதெல்லாம் நீண்ட நீண்ட காலமாக கிரிக்கெட்டில் இருப்பது. இப்போது தொழில்நுட்பம், கேமராக்கள் வந்ததால் வெளியில் தெரிகிறது. பந்தின் மீது இனிப்புகளைத் தடவுவது, சன்ஸ்க்ரீன் லோஷன்களைத் தடவுவது, எல்லாவற்றையு முயன்று பார்த்தனர்.
ஆனால் உப்புக் காகிதம் பயன்படுத்தியது முட்டாள்தனமானது. ஆனால் இதில் ஒட்டுமொத்த அணியே ஈடுபடவில்லை என்பது நம்பக் கஷ்டமாக உள்ளது. ஏதோ ஒருவிதத்தில் அணியில் உள்ள அனைவருமே இதில் ஈடுபட்டிருப்பார்கள், ஸ்மித் பழியை ஏற்றுக்கொண்டார்.”
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago