கேப்டன் பதவியை இழந்ததன் எதிரொலி: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டேரன் சமி ஓய்வு

By செய்திப்பிரிவு

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கேப்டன் பதவியை இழந்த டேரன் சமி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார்.

2010 அக்டோபர் முதல் மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த டேரன் சமியிடம் அந்தப் பதவியைப் பறித்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம், அவர் டி20 போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக தொடர்வார் என அறிவித்துள்ளது. இதுவரை 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சமி, அதில் 30 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் தேவ் கேமரூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டேரன் சமி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக முறைப்படி கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட தயாராக இருப்பதாக சமி தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக மிகுந்த ஆற்றல் வாய்ந்த கேப்டனாகவும், துடிப்புமிக்க கேப்டனாகவும் டேரன் சமி செயல்பட்டுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். டி20 போட்டிக்கு அவர் தொடர்ந்து கேப்டனாக இருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் ராம்தின் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது: டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதை மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். இது மிகப்பெரிய வாய்ப்பாகும். முன்னதாக கேப்டன் இருந்த டேரன் சமி, மிகவும் பணிவான மற்றும் கடுமையாக உழைக்ககூடிய கிரிக்கெட் வீரர். அவர் கேப்டனாக இருந்தபோது 6 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தேடித்தந்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்தான் நான் கேப்டனாக பணியாற்றவுள்ள முதல் கிரிக்கெட் தொடர்.

அந்தத் தொடர் நிச்சயம் எல்லோருக்கும் விருந்தாக அமையும் வகையில் விளையாடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன், ஜூலை மாதங்களில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நியூஸிலாந்து அணி 3 டெஸ்ட் மற்றும் இரு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கு ராம்தின் கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் 3 விதமான போட்டிகளுக்கும் தனித்தனிகேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிக்கு டுவைன் பிராவோவும், டி20 போட்டிக்கு டேரன் சமியும் கேப்டனாக உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்