முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனியின் பெருமைக்கு எதிராகப் பேசுவது கடினம் என்று பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக மகேந்திர சிங் தோனி அறியப்படுகிறார். 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை என தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி மாபெரும் உயரங்களைத் தொட்டிருக்கிறது.
2017-ஆம் ஆண்டு முதல் இந்திய ஒரு நாள் அணியின் தலைவராக விராட் கோலி செயல்பட்டு வருகிறார். கடந்த வருடம் ஜூலை மாதம் நடந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து தோனி இதுவரை எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை.
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுக்குப் பேட்டியளித்துள்ள கெவின் பீட்டர்சன், தோனியைப் பாராட்டிப் பேசியுள்ளார். "தோனியிடம் எல்லோரும் எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள் என்பதையும், அவர் எப்படி வாழ்கிறார், இந்திய அணி மற்றும் சிஎஸ்கேவுக்கு தலைவராக அவர் எப்படி செயல்பட்டார் என்பதையெல்லாம் பார்க்கும் போது தோனியின் பெருமைக்கு எதிராகப் பேசுவது என்பது மிகக் கடினமாக இருக்கும்" என்று பீட்டர்சன் பேசியுள்ளார்.
இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூபப்ர் கிங்ஸ் அணியின் தலைவராக தோனி மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரோனா தொற்று காரணமாக, ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago