20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு தோனி தயாராக இருந்தால் மட்டுமே அவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
2019 உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பிறகு தன் கிரிக்கெட்டைப் பற்றி வாயைத் திறக்காமல் பலருக்கும் போக்குக் காட்டி வரும் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக மீண்டும் மட்டை, பேட், கிளவ்வை தூசித் தட்டி எடுத்தார், ஆனால் கரோனா வைரசினால் ஐபிஎல் தொடரே சந்தேகமாகியுள்ளது.
இந்நிலையில் ஹர்பஜன் சிங் உலகக்கோப்பை டி20 பற்றி கூறும்போது,
“தோனி நிலை குறித்து எப்படி தீர்மானம் செய்வீர்கள். ஐ.பி.எல். போட்டியில் அவரது சிறந்த பார்மை பார்ப்பீர்களா? அல்லது கடந்த காலங்களில் அவர் இந்திய அணிக்கு அளித்த பங்களிப்பையும், இந்தியாவின் தலைசிறந்த வீரர்கள் மற்றும் கேப்டன்களில் ஒருவராக விளங்கினார் என்பதன் அடிப்படையில் அவருக்குரிய மரியாதை அளிப்பீர்களா?
தோனி மிகப்பெரிய வீரர். அவரால் முடியுமா? முடியாதா? என்பது குறித்து சொல்ல வேண்டிய தேவையில்லை. அவரது திறமை குறித்து நீங்கள் அதிகம் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு தோனி தேவையென்று நினைக்கும் பட்சத்தில், அவரும் தயாராக இருந்தால், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு அவரை தேர்வு செய்யலாம்”
இவ்வாறு கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago