கிரிக்கெட் இல்லாததால் வீரர்கள் பலர் இந்த நேரத்தை சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடலில், அரட்டையில் செலவிட்டு வருகின்றனர். இதில் நேற்று சிஎஸ்கேவுக்கு ஆடும் இந்திய ஒருநாள் வீரர் கேதார் ஜாதவ் ரசிகரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்துள்ளார்.
தோனியின் கேப்டன்சியில்தான் கேதார் ஜாதவ் இந்திய அணிக்குள் வந்தார், சிஎஸ்கே அணியிலும் தோனியின் கீழ் ஆடி வருகிறார், இவருக்கு கிரிக்கெட்டில் பிடித்த ஆளுமை தோனி என்றால் சினிமாவில் பிடித்த ஆளுமை சல்மான் கான் ஆவார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் கேதார் ஜாதவ்விடம் தர்மசங்கடமான கேள்வியை ரசிகர் ஒருவர் கேட்டர் சல்மானா, தோனியா யார் சூப்பர்ஸ்டார் என்று கேட்டார்
அதற்கு கேதார் ஜாதவ், “என்னைப் பொறுத்தவரையில் சூப்பர் ஸ்டார் என்பது இரண்டு வார்த்தைகள் எனவே இருவருமே எனக்கு சூப்பர் ஸ்டார்கள்தான். நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை, ஆனாலும் தோனியினால்தான் நான் இத்தனை காலம் கிரிக்கெட் ஆடி வருகிறேன்.
தோனியினால்தான் நான் சல்மான் கானைச் சந்திக்க முடிந்தது. எனவே தோனி முதல், சல்மான் இரண்டாவது. தாய் தந்தை இருவரில் யாரைப் பிடிக்கும் என்பதைப் போன்ற கடினமான கேள்வி இது” என்றார்.
மேலும் தோனியிடம் திட்டு வாங்கியதுண்டா என்ற கேள்விக்குப் பதில் அளித்த கேதார் ஜாதவ் சல்மான் கானின் ஒருபடத்தில் வரும் “ஒரே பார்வையில் எதிராளியை சிறுநீர் கழிக்க வைப்பார்” என்ற வசனத்துடன் தோனி பார்வையே கண்டிப்புதான் என்று கூறினார் கேதார் ஜாதவ்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago