கிளென் மெக்ரா உச்சத்தில் இருக்கும் போது உலக கிரிக்கெட்டில் இரண்டு பேட்டிங் மேதைகளான லாரா, சச்சின் ஆகியோரும் உச்சத்தில் இருந்தனர். சச்சின் டெண்டுல்கரை கிளென் மெக்ரா சில முறை வீழ்த்தியுள்ளார்.
லாரா, சச்சின் இருவரும் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளியில் அறிமுகமானாலும் ஒரு முறை இயன் சாப்பல் கூறும்போது, சச்சின் டெண்டுல்கர் கொஞ்சம் திறமை கூடுதலானவர் என்று குறிப்பிட்டார்.
சச்சின்-கிளென் மெக்ரா மோதல் போலவே லாரா-மெக்ரா மோதலும் உலகப் பிரசித்தி பெற்றது,
இந்நிலையில் சச்சினா, லாராவா என்ற இன்றும் நிறைவடையாத விவாதத்தை ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ மீண்டும் கிளற, 25 அதிவிரைவு கேள்விகளுக்கு பதில் அளித்த கிளென் மெக்ரா, லாராவா, சச்சினா நீங்கள் பந்து வீசக் கடினமாக உணர்ந்த பேட்ஸ்மென் யார் என்ற கேள்விக்கு கிளென் மெக்ரா, “கடினமா? இந்த விஷயத்தில் நான் லாராவைத்தான் குறிப்பிடுவேன், இதை என் அனுபவத்திலிருந்து கூறுகிறேன். ஆனால் ஹாட்ரிக் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அந்த விருப்பப் பட்டியலில் லாரா, சச்சின், திராவிட் விக்கெட்டுகளை விரும்புவேன்” என்றார்.
அதே போல் இப்போது ஒரு முழுநிறைவான பவுலர் இருக்கிறார் என்றால் அது பாட் கமின்ஸ்தான் என்றார்.
அதே போல் தான் மிஸ் செய்த பந்து எது என்று கேட்ட போது, “மணிக்கு 100 மைல் வெகத்தில் வீசும் பந்துதான்” என்றார்.
பேட்ஸ்மென்களை விட பவுலர்கள் கடினமாக உழைப்பவர்கள் என்றும் ஒருகேள்விக்குப் பதில் அளித்தார் கிளென் மெக்ரா.
கிரிக்கெட்டுக்கு வெளியே அதிவேக மனிதன் உசைன் போல்ட்டையும் டென்னிஸ் லெஜண்ட் ரோஜர் பெடரரையும் சந்திக்க ஆசை என்றார் கிளென் மெக்ரா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
58 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago