கரோனா பாதிப்பினால் உதவுவதற்காக நிதி திரட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நடத்தலாம் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கூற கபில்தேவ் அதற்கு தேவையில்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக கபில்தேவ் கூறும்போது, “அவர் கருத்தைக் கூற அவருக்கு உரிமை உண்டு. நாம் நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை, போதிய நிதி உள்ளது. இதில் நாம் அனைவரும் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதுதான் அவசியம். இப்போது கூட நிறைய அரசியல் ரீதியான விமர்சனங்கள் வருகின்றன, நான் தொலைக்காட்சியில் பார்க்கிறேன் இது அவசியமற்றது. இதை நிறுத்த வேண்டும்.
பிசிசிஐ பெரிய தொகையை கரோனா நிவாரணத்துக்காகக் கொடுத்துள்ளது (ரூ.51 கோடி), தேவைப்பட்டால் பிசிசிஐ இன்னும் அதிகமாக பங்களிப்புச் செய்யும் நிலையில் இருக்கிறது. நிலைமைகள் இப்போதைக்கு சகஜமாகிவிடும் என்று தோன்றவில்லை. இந்தச் சமயத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வீரர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதா? இதைச் செய்ய வேண்டிய தேவையில்லை.
ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு அது மதிப்பு மிக்கதல்ல. மேலும் 3 போட்டிகளில் எவ்வளவு நிதி சேர்ந்து விடப்போகிறது? நாட்டை விட கிரிக்கெட் பெரிதல்ல. ஏழைகள், மருத்துவ ஊழியர்கள், போலீஸ் ஆகியோரோடு இந்தப் போரில் முன்னிலையில் நின்று போராடுபவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பிறருக்கு உதவுவது நம் பண்பாடு எனவே ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தினை அமெரிக்கா, பிரேசிலுக்கு அனுப்பியது குறித்து பெருமைப்படுகிறேன். அடுத்தவர்களுக்கு அதிகம் கொடுக்கும் தேசமாக நாம் மாற வேண்டும், மற்றவர்களிடமிருந்து பெறும் தேசம் என்பதை விட.
நெல்சன் மண்டேலா மிகச்சிறிய சிறையில் 27 ஆண்டுகள் கழித்தார். அதை ஒப்பிடும்போது நாமெல்லோரும் வசதியாகவே இருக்கிறோம். வாழ்க்கையை விட உயிரை விட தற்போது வேறு ஒன்றும் பெரிதல்ல. உயிரைத்தான் நாம் பாதுகாக்க வேண்டும்” இவ்வாறு கூறினார் கபில்தேவ்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago