படம் சொல்லும் கதை: நினைவுச் சிறகுகளிலிருந்து உதிர்ந்த இறகு.. ஒரு சென்னை கிரிக்கெட் மேட்ச்: சுனில் கவாஸ்கரின் ஆசை நிராசையான கதை

By இரா.முத்துக்குமார்

மேலே உள்ள படத்தில் கேட்ச் பிடிப்பது அப்போதைய விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி, ஆட்டமிழந்த பேட்ஸ்மேன் அதிரடி கிங் விவ் ரிச்சர்ட்ஸ், தலைபாகை மட்டுமே தெரியும் பவுலர் மணீந்தர் சிங்.

1983 உலகக்கோப்பையில் மே.இ.தீவுகளின் ஹாட்ரிக் உலகக்கோப்பை கனவுகளை கபில்ஸ் டெவில்ஸ் என்று அழைக்கப்படும் இந்திய அணி முறியடித்து கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை மாற்றி எழுதிய தொடருக்குப் பிறகு, நடந்த தொடரில் கிளைவ் லாய்ட் இந்தியாவை பிரித்து மேயும் எண்ணத்துடன் இந்தியாவுக்கு அதிரடி மே.இ.தீவுகள் அணியுடனும், பழிவாங்கும் கடும் கோபத்துடனும் வந்தார்.

ஏற்கெனவே இந்தியாவை புரட்டி எடுத்து 3-0 என்று தொடரைக் கைப்பற்றி விட்டார். கடைசி டெஸ்ட் 6வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்தத் தொடரில் பேட்டிங்கில் சுனில் கவாஸ்கர் பவுலிங்கில் கபில் தேவ் ஆகியோர் மட்டுமே சிறப்பாகச் செயல்பட உலகக்கோப்பை தொடர்நாயகன் மொஹீந்தர் அமர்நாத் சுத்தமாக பார்ம் அவுட் ஆகி ஒற்றை இலக்கத்துலேயே ஆட்டமிழந்து அணியை விட்டே நீக்கப்பட்டார்.

அதோடு இல்லாமல் சுனில் கவாஸ்கர் தான் இனிமேல் தான் தொடக்க வீரராக இறங்க மாட்டேன், 2வது டவுன் அதாவது 4ம் நிலையில்தான் ஆடுவேன் என்று முடிவெடுத்த நேரம். இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து தான் 4ம் நிலையில்தான் இறங்குவேன் என்று கவாஸ்கர் கூறிவிட்டார்.

முதல் நாள் ஆட்டம் மழையினால் நடைபெறாமல் போக 2ம் நாள் ஆட்டத்தில் லாய்ட் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அப்போது கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மண்ட் ஹைன்ஸ் இறங்கினர், கிரீனிட்ஜ் 34 ரன்களில் சாஸ்திரி பந்தில் கவாஸ்கரிடம் கேட்ச் ஆகி வெளியேற ரிச்சர்ட்ஸ் இறங்கி அதிரடி பாணியில் 32 ரன்களை எடுத்தார். டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 23 ரன்களில் மணீந்தர் சிங் பந்தில் கிளீன் பவுல்டு ஆனார்.

ரிச்சர்ட்ஸை பிடித்து ஆட்டிப்படைத்த மணீந்தர் சிங் அவரது விக்கெட்டை வீழ்த்தியே விட்டார். மேலே உள்ள புகைப்படம் அதுதான். தி இந்து ஆர்கைவ் படம். அப்போதெல்லாம் புகைப்படம் என்றால் தி இந்து ஆங்கிலம் தான். கபில்தேவ் 3 விக்கெட், மணீந்தர் 3 விக்கெட்டுகளுடன் மே.இ.தீவுகல் 313 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் கவாஸ்கர் முதன் முதலாக தொடக்க வீரராக இறங்காமல் கெய்க்வாட், சித்து இறங்கினர். ஆனால் கெய்க்வாடும் டக் அவுட் ஆனார். 3ம் நிலையில் இறங்கிய வெங்சர்க்காரும் டக் அவுட் ஆக டக்கிலேயே 2 விக்கெட்டுகளை இழக்க கவாஸ்கர் 4ம் நிலையில் இறங்கினார், ஆனால் டெக்னிகலாக அவர் தொடக்க வீரர் போல்தான் ஸ்கோரில் 1 ரன் கூட ஏறவில்லை, சித்துவும் ரன் இல்லாமல் இருந்தார், எனவே பேர்தான் 4ம் நிலை தொடக்க வீரர்போல்தான் கடைசியில் கவாஸ்கரின் ஆசை நிராசையானது.

ஆனால் கவாஸ்கர் பேட்டிங்கை ஒன்றும் செய்ய முடியவில்லை மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், ராபர்ட்ஸ், டேவிஸ், ஹார்ப்பர் ஆகியோரினால் ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி 23 பவுண்டரிகளுடன் 236 நாட் அவுட் என்று கவாஸ்கர் முடிக்க, ரவிசாஸ்திரி 72 ரன்களை எடுத்தார். கபில்தேவ் 6, சையத் கிர்மானி மிக முக்கியமாக 63 ரன்களை எடுத்தார். கவாஸ்கருக்கும் கிர்மானிக்கும் 143 ரன்கள் 9வது விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப் இருவருமே ஆட்டமிழக்கவில்லை. கேப்டன் கபில்தேவ் 451/8 என்று டிக்ளேர் செய்தார். மார்ஷல் 5 விக்கெட்டுகள். இரண்டாவது இன்னிங்ஸில் மே.இ.தீவுகள் 64/1 என்று முடிய ஆட்டம் ட்ரா ஆக, தொடரை மே.இ.தீவுகள் 3-0 என்று கைப்பற்றி ஒருநாள் தொடரையும் 6-0 என்று கைப்பற்றி உலகக்கோப்பை மண்கவ்வலுக்கு பழி தீர்த்தது.

அந்தத் தொடரில் மே.இ.தீவுகள் பவுலர்கள் ஹோல்டிங் (30 விக்.), மார்ஷல் (34) ஆகியோருக்கு நிகராக கபில்தேவ் 30 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார், இதில் அகமதாபாத்தில் கதிகலக்கும் வேகப்பந்து வீச்சில் 9 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்ஸில் கைப்பற்றினார் கபில்தேவ். இந்தத் தொடரின் நாய்கர்கள் இருவர்: மார்ஷல், கபில்தேவ். சென்னை டெஸ்ட் நாயகன் சுனில் கவாஸ்கர்.

சையத் கிர்மானி, ரிச்சர்ட்ஸ், மணீந்தர் சிங்கின் இந்தப் புகைப்படம் நினைவுகளைக் கிளறிவிடுவதாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்