ஐபிஎல் தொடங்கிய 2008-ம் ஆண்டு ஷேன் வார்ன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியதோடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஷேன் வார்ன் ஒரு சிறந்த கேப்டன், சிறந்த உத்தி வகுப்பாளர் இவரது கேப்டன்சி திறமைகளை ஆஸ்திரேலியா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
முதல் 4 சீசன்களுக்கு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார், பிறகு அணியின் நம்பிக்கை அறிவுரையாளராக இருந்தார். இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்சின் பிராண்ட் அம்பாசிடராக அவர் இணைந்துள்ளார், ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்தான் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. கோவிட்-19 பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்திய வீரர்களை மட்டுமே கொண்ட ஐபிஎல் அணியை ஷேன் வார்ன் தேர்வு செய்துள்ளார், இதில் சச்சின் இல்லை, ஆனால் சேவாக் உண்டு. ஆனால் இந்த இந்திய அணி 2008 முதல் 2011 வரையிலான ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஆடிய இந்திய வீரர்களைக் கொண்டு தேர்வு செய்துள்ளார் ஷேன் வார்ன்.
விராட் கோலி, சேவாக், ரோஹித் சர்மா அணியில் உள்ளனர், சச்சின் டெண்டுல்கர் இல்லை. சூதாட்ட அணுகலை தெரிவிக்காததால் பிசிசிஐயினால் தடை செய்யப்பட்ட சித்தார்த் திரிவேதி என்ற வேகப்பந்து வீச்சாள்ரை ஷேன் வார்ன் இந்த அணியில் தேர்வு செய்துள்ளார்.
அதே போல் யூசுப் பதான் மிகச்சிறந்த ஐபிஎல் சதத்தை மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகச் சேர்த்ததைக் குறிப்பிட்ட ஷேன் வார்ன் அவரைச் சேர்த்துள்ளார், யூசுப் பத்தான் 37 பந்துகளில் அந்தச் சதத்தை அடித்தது குறிப்பிடத்தக்கது. மகேந்திர சிங் தோனியை ‘ஜீனியஸ்’ பிரில்லியண்ட் பினிஷர் என்று வர்ணிக்கிறார் ஷேன் வார்ன்.
ஷேன் வார்ன் ஆல்டைம் ஐபிஎல் லெவன் வருமாறு:
ரோஹித் சர்மா
சேவாக்
விராட் கோலி
யுவராஜ் சிங்
யூசுப் பத்தான்
தோனி
ஜடேஜா
ஹர்பஜன் சிங்
ஜாகீர் கான்
சித்தார்த் திரிவேதி
முனாப் படேல்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago