அப்ரிடி அறக்கட்டளை நிதியுதவி கோரிய ட்வீட்டால் சர்ச்சையானதைத் தொடர்ந்து, யுவராஜ் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
உலகமெங்கும் கரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு உலக நாடுகள் இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பாகிஸ்தான் நாட்டில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 2000 பேரைத் தாண்டிவிட்டது. 20 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.
மேலும், பாகிஸ்தானில் கரோனா தொற்றுக்கு அந்த நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரரான ஷாகித் அப்ரிடி தனது அறக்கட்டளையின் மூலம் நிதி திரட்டி உதவிகள் செய்து வருகிறார். அதற்கு நிதியுதவி அளிக்குமாறு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் இருவருமே தங்களது ட்விட்டர் தளத்தில் விளம்பரப்படுத்தினார்கள். இதனால் சர்ச்சையில் சிக்கினார் யுவராஜ் சிங்.
எப்படி நீங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் அறக்கட்டளைக்கு நிதியுதவி கோரலாம் என்று யுவராஜ் சிங்கை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்தார்கள். இதனால் #ShameOnYuviBhajji, #IStandWithYuviBhajji என்ற ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகின. யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் இருவருக்கும் ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துகளை அள்ளி வீசினார்கள்.
தனது ட்வீட் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அதற்கு விளக்கமளிக்கும் விதமாக யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பதிவில் சிறிய கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"எப்படி இயலாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு செய்தியை இவ்வளவு தவறாகப் புரிந்து கொள்ள முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. அந்தச் செய்தி மூலமாக நான் சொல்ல வந்தது எல்லாம், நாம் நமது தேசத்தில் சரியான சுகாதாரத்தை மக்களுக்குத் தர உதவ வேண்டும் என்பதே. என் நோக்கம் யாரையும் புண்படுத்த வேண்டும் என்பதல்ல. நான் ஒரு இந்தியன், என் உடம்பில் ஓடுவது இந்திய ரத்தம். மனிதத்துக்காக என்றும் நிற்பேன். ஜெய்ஹிந்த்".
இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago