கரோனா வைரஸ் (கொரோனா) போன்ற கடினமான காலங்களில் ஐபிஎல் உள்ளிட்ட பொழுதுபோக்கு கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் சி.இ.ஓ. பர்தாக்கூர் புதிய யோசனை வழங்கியுள்ளார்.
ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகும் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் நடைபெறாது என்றே தெரிகிறது. இதனையடுத்து இந்திய வீரர்களை மட்டுமே கொண்ட ஐபிஎல் தொடரை நடத்தலாமே என்று ராஜஸ்தான் ராயல்ஸ் சி.இ.ஓ பர்தாக்கூர் புதிய யோசனை வழங்கியுள்ளார்.
“நாங்கள் குறைக்கப்பட்ட போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரை ஆதரிக்கிறோம், கடைசியில் இது இந்தியன் பிரீமியர் லீக் தானே” என்றார் அவர்.
இருதரப்பு தொடர்களை சமரசம் செய்தால்தான் ஐபிஎல் கிரிக்கெட்டை இந்த ஆண்டு இறுதியில் நடத்தலாம். அது சாத்தியமில்லாத ஒன்று.
» எனக்கு கங்குலி போல் தோனி, கோலி ஆதரவு அளிக்கவில்லை: யுவராஜ் சிங் பகீர் குற்றச்சாட்டு
» கரோனாவுக்கு எதிரான போர்: ரோஹித் சர்மா ரூ.75 லட்சம் நிதியுதவி
“முன்னதகா நாம் இந்தியர்கள் மட்டுமே ஆடும் ஐபிஎல் பற்றி நாம் யோசிக்கவில்லை, ஆனால் இப்போது நம்மிலிருந்தே தேர்ந்தெடுத்து விளையாடும் அளவுக்கு தரம் உள்ளது. இந்தியர்கள் மட்டுமே ஆடும் ஐபிஎல் நடத்துவது சிறந்தது.
இது தொடர்பாக பிசிசிஐ முடிவெடுக்கும், ஏப்ர. 15ம் தேதிக்குப் பிறகு அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் பரிசீலிப்போம்” என்றார் பர்தாக்கூர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago