நன்றி மறக்காத மெஸ்ஸி: கரோனாவிலிருந்து மீட்க பார்ஸிலோனா மருத்துவமனைக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி

By ஐஏஎன்எஸ்

அர்ஜென்டினாவில் பிறந்திருந்தாலும் பார்சிலோனா வீரராகவே அறியப்பட்டு கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, கரோனாவிலிருந்து மீட்க ஸ்பெயினில் உள்ள பார்ஸிலோனா மருத்துவமனைக்கு ரூ.8.24 கோடி (10 லட்சம் யூரோ) நிதியுதவி வழங்கியுள்ளார்.

உலக நாடுகளை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கிறது கரோனா வைரஸ். இதுவரை உலக அளவில் 19,618 பேரை கரோனா வைரஸ் காவு வாங்கியுள்ளது. 4.35 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இதில் ஸ்பெயின் நாட்டில் மட்டும் 3,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கரோனாவிலிருந்து மீள்வதற்காக ஸ்பெயின் நாடு போராடி வருகிறது.

ஸ்பெயின் நாட்டுக்கு உதவும் வகையில் அர்ஜென்டினாவில் பிறந்திருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பார்சிலோனா வீரராக அறியப்பட்டுவரும் மெஸ்ஸி பார்ஸிலோனா அரசு மருத்துவமனைக்கு ரூ.8.24 கோடி (10 லட்சம் யூரோ) நிதியுதவி வழங்கியுள்ளார்.

கால்பந்து உலகின் நாயகனாக வலம் வரும் லயோனல் மெஸ்ஸி ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இதுவரை, பார்சிலோனா அணிக்காக 600-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 500 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார்.

கரோன வைரஸிலிருந்து ஸ்பெயின் மக்கள் மீண்டு வர வேண்டும் என்பதற்காக பார்சிலோனா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இந்த 10 லட்சம் யூரோக்களை மெஸ்ஸி வழங்கியுள்ளார். இதை மருத்துவமனை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது.

தன்னை கால்பந்து உலகில் அடையாளம் காட்டி, புகழின் உச்சத்தில் அமரவைத்த ஸ்பெயின் நாட்டு மக்களுக்கும், பார்சிலோனா மண்ணின் மைந்தர்களுக்கும் நன்றிக் கடனை மெஸ்ஸி செலுத்தியுள்ளார். மெஸ்ஸி மட்டுமல்ல, அவரின் முன்னாள் மேலாளர் பெப் கார்டியாலோ மருந்துப் பொருட்கள், உபகரணங்கள் வாங்க 10 லட்சம் யூரோக்கள் கொடுத்துள்ளார்.

மேலும், போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜார்ஜ் மென்டிஸ் ஆகியோர் தலா 10 லட்சம் யூரோக்களை லிஸ்பன், போர்டோ நகர மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளனர்.

கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபா, 28 சர்வதேச கால்பந்து வீரர்களை வைத்து 13 மொழிகளில் வீடியோ வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி, உலகக்கோப்பை சாம்பியன் ஜெர்மனி அணி வீரர் பிலிப் லாம், ஸ்பெயின் வீரர் இக்கர் காஸிலஸ், கார்லே பை, மெஸ்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்