ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே

By பிடிஐ

கரோனா வைரஸ் எனும் கோவிட்-19 அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை தள்ளி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜப்பான் நாடாளுமன்றத்தில் கூறும்போது, “ஜப்பான் முழுநிறைவான ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவே விரும்புகிறது, ஆனால் இது கடினமானது என்று தோன்றுகிறது, காரணம் நாம் முதலில் தடகள வீரர்களைப் பற்றி யோசிக்க வேண்டியுள்ளது, எனவே ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாததாகவே படுகிறது” என்றார்.

ஆகவே ஜூலை 24ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

ஆனால் ஒலிம்பிக் போட்டிகளை முழுதும் ரத்து செய்வது என்பது சாத்தியமல்ல என்று கூறுகிறார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.

உல்கம் முழுதும் கரோனா பலி எண்ணிக்கை 14, 300-ஐக் கடந்துள்ள நிலையில் வீரர்கள் தரப்பிலிருந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டுக்கு கடும் நெருக்டி கொடுக்கப்பட்டது. வீரர்கள் பாதுகாப்பு, ரசிகர்கள் பாதுகாப்பு அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கரோனாவினால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவது தவிரக்க முடியாததாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்