கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து ஆடவர், மகளிர் பிரிவுகளுக்கான தொழில்முறை டென்னிஸ் போட்டிகள் ஜூன் 7-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
களிமண் தரையில் விளையாடப்படும் அனைத்து தொடர்களும் திட்டமிட்டபடி நடைபெறாது என ஏடிபி, டபிள்யூடிஏ ஆகியவை கூட்டாக அறிவித்துள்ளன. களிமண் தரையில் விளையாடப்படும் பிரெஞ்சு ஓபன் தொடர் மேமாதத்தில் இருந்து செப்டம்பர்மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட மறு நாளிலேயே மற்ற அனைத்து தொடர்களும் ஜூன் 7-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அனைத்து டென்னிஸ் போட்டிகளும் ஏப்ரல் இறுதி வரை அல்லது மே தொடக்கம் வரை தள்ளிவைக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. தற்போதைய புதிய அறிவிப்பால் ஆடவர், மகளிர்பிரிவில் இணைந்து நடத்தப்படும் மாட்ரிட், ரோம் போட்டிகள் பாதிக்கப்படும்.
அதேவேளையில் மகளிர் பிரிவில் ஸ்ட்ராஸ்பர்க், பிரான்ஸ்,ரபாட், மொராக்கோ தொடர்களும் ஆடவர் பிரிவில் முனிச், எஸ்டோரில், போர்ச்சுகல், ஜெனீவா, லியோன், பிரான்ஸ் தொடர்களும் கைவிடப்படக்கூடிய நிலை உள்ளது. - ஏஎப்பி
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago