மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்பக் கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான அன்னை தெரசா கோப்பைக்கான மகளிர் கூடைப்பந்து போட்டி கடந்த 14-ம்தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், 8 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன.
சூப்பர் லீக் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்பக் கழக கல்லூரி அணி 73-54என்ற புள்ளிகள் கணக்கில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியையும், 77-48 என்ற புள்ளிகள் கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியையும், 87-46 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியையும் வென்று அன்னை தெரசா கோப்பையைக் கைப்பற்றியது.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி அணி 76-75 என்ற புள்ளிகள் கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியையும்,58-36 என்ற புள்ளிகள் கணக்கில்திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி அணியையும் வென்று 2-வது இடம் பிடித்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் வீராங்கனைகளுக்கு ஜமால் முகமது கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே.காஜா நஜிமுதீன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago