சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதுவரை முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா 2-வது இடத்துக்குச் சென்றுள்ளது.
இதற்கு முன்பு 2009-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. இப்போது சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின் முதலிடத்துக்கு வந்துள்ளது.
ஏற்கெனவே ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இப்போது டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்ததை அடுத்து 6 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட், ஒருநாள் போட்டி என இரண்டிலும் முதலிடத்துக்கு வந்துள்ளது.
டெஸ்ட் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா 2-வது இடத்திலும், இங்கிலாந்து 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 4-வது இடத்திலும் உள்ளன.
3-வது இடத்தில் இருந்த இந்தியா 5-வது இடத்துக்குப் பின்தங்கிவிட்டது. இதனால் இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஓரிடம் முன்னேறியுள்ளன.
அதே நேரத்தில் ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தொடர்ந்து 3,4,5-வது இடங்களில் உள்ளன.
இருபது ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றபோதிலும் இலங்கை அணி முதலிடத்தை இந்தியாவிடம் பறிகொடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago