கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல்: ஆஸ்திரேலியாவில் ஷெபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி ரத்து

By செய்திப்பிரிவு

கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த ஷெபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் முதல் வகுப்பு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாக ஷெபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) அமைப்பின் மேற்பார்வையில் ஆண்டுதோறும் இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்தப் போட்டியின் லீட் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. ஆனால் கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலிய தலைமைச் செயல் அதிகாரிகெவின் ராபர்ட்ஸ் நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “மார்ச் 27 முதல் ஷெபீல்ட் ஷீல்ட்கிரிக்கெட் இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறவிருந்தன. ஆனால்கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலால் தற்போது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த போட்டி எப்போது நடத்தப்படும் என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். ஏற்கெனவேலீக் போட்டிகளின்போது பெர்த், அடிலெய்ட், மெல்பர்னிலுள்ள மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.

ஒருவேளை போட்டியை நடத்தமுடியாமல் போனால், தற்போதுயார் முன்னிலையில் இருக்கிறார்களோ அந்த அணிக்கு கோப்பை வழங்கப்படும்” என்றார்.

ஹாங்காங்

இதேபோல் ஹாங்காங்கில் நடைபெறவிருந்த சூப்பர் ரக்பி போட்டிகள் கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை அங்குள்ள சன்ஸார் அமைப்பு நடத்தி வருகிறது. தற்போது அங்கு கோவிட்-19 வைரஸ் தாக்கம் இருப்பதால் போட்டியை ரத்து செய்வதாக சன்ஸார் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தப் போட்டியில் நியூஸிலாந்தைச் சேர்ந்த 5 அணிகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா உள்ளிட்ட 15 அணிகள் மோதவிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்