அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்: புதிய சாதனையை நோக்கி செரீனா வில்லியம்ஸ்

By ஏஎஃப்பி

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது.

முதல் நாளான இன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டங்களில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரேசிலின் ஜோ சவுசாவையும், ஸ்பெயினின் ரஃபேல் நடால், குரேஷியாவின் போர்னா கோரிச்சையும் எதிர் கொள்கின்றனர்.

போட்டித் தரவரிசையில் முதலி டத்தில் இருக்கும் ஜப்பானின் நிஷிகோரி, பிரான்ஸின் பெனாய்ட் பேரையும், நடப்பு சாம்பியனான குரேஷியாவின் மரின் சிலிச் அர்ஜெண்டினாவின் குடோ பெல்லாவையும் சந்திக்கின்றனர்.

மகளிர் ஒற்றையர் ஆட்டங் களில் நடப்பு சாம்பியனான அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் விட்டாலியாவையும், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷ்யா வின் மரியா ஷரபோவா, ஆஸ்திரேலி யாவின் டேரியா கேவ்ரிலோ வையும் எதிர்கொள்கின்றனர்.

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும்பட்சத்தில் காலண்டர் கிராண்ட்ஸ்லாம் (அதாவது ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாமில் சாம்பி யனாவது) பட்டம் வென்றவர் என்ற பெருமையைப் பெறுவார் செரீனா. 1988-ல் ஜெர்மனியின் ஸ்டெபி கிராஃப் காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வென்றார். அதன்பிறகு யாரும் காலண்டர் கிராண்ட்ஸ்லாமை வெல்லாத நிலையில் செரீனா இப்போது அந்த வாய்ப்பை நெருங்கியுள்ளார்.

இந்தப் போட்டியில் வெல்லும்பட்சத்தில் ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் (22) வென்றவர் என்ற சாதனை யை ஸ்டெபி கிராஃபுடன் பகிர்ந்து கொள்வார் செரீனா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்