டிரெண்ட் பிரிட்ஜ், 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று உணவு இடைவேளைக்கு சற்று முன் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்த நிலையில் இன்னிங்சை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் ஆரோக்கியமான 331 ரன்கள் முன்னிலையைப் பெற்றுள்ளது இங்கிலாந்து.
ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் 27 ஓவர்களில் 111 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நேற்று 17 ஓவர்களில் 73/3 என்று கைப்பற்றிய ஸ்டார்க் இன்று மேலும் 10 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்து மேலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பிராட் பேட்டிங்கிலும் ஓரளவுக்கு அசத்தி 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 24 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஃபின் ரன் எடுக்காமல் நாட் அவுட். 85.2 ஓவர்களில் 391 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து.
இன்று 274/4 என்று களமிறங்கிய இங்கிலாந்து அணி அவசரகதியில் விக்கெட்டுகளை இழந்தது. ஜோ ரூட் 130 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டார்க் வீசிய வழக்கமான இடது கை வேகப்பந்து வீச்சாளரின் கோணத்துக்கு ரூட் மட்டையின் விளிம்பைக் கொடுத்தார், நெவில் தவறு செய்யவில்லை.
இரவுக்காவலன் மார்க் உட் அவருக்கு கொடுத்த பணியை ஓரளவுக்கு திறம்பட செய்தார். 32 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஸ்டார்க்கின் அதிவேக லெக்ஸ்டம்ப் பந்தை கோட்டை விட்டார். லெக் ஸ்டம்ப் பறந்தது.
கிறிஸ் பட்லர் இறங்கி அவசரகதியில் 3 பவுண்டரிகளை அடித்து கொஞ்சம் அலட்சியமாக ஸ்டார்க் பந்தை அதிதன்னம்பிக்கையுடன் ஒரு பெரிய டிரைவ் ஆட முயன்று பவுல்டு ஆனார்.
ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 5 ரன் எடுத்து ஹேசில்வுட்டின் லெக் திசை பந்தில் எட்ஜ் எடுத்து அவுட் ஆனார். 332/8 என்று ஆனது இங்கிலாந்து, அதன் பிறகு மொயீன் அலி, பிராட் இணைந்து 8 ஓவர்களில் 58 ரன்களை சாத்தினர். மொயின் அலி 24 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஜான்சனின் முதல் விக்கெட்டாகச் சாய்ந்தார். ஆனால் ஸ்லிப்பில் ஸ்மித் அற்புதமான ஒரு கை கேட்ச் எடுத்ததும் குறிப்பிடத்தகுந்தது.
ஹேசில்வுட்டின் ஓரே ஓவரில் மொயீன் அலி 2 பவுண்டரிகளை விளாச, பிராட் ஒரு பவுண்டரி 1 சிக்சர் அடிக்க அந்த ஓவரில் 20 ரன்கள் வந்தது. விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் ஆஸ்திரேலியா இன்று மேலும் 117 ரன்களை விட்டுக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிட்ச் ஆஸ்திரேலிய பவுலிங்கை வைத்துப் பார்க்கையில் கொஞ்சம் எளிதானது போல் தெரிகிறது. ஆனால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் சரியான உத்தியுடன் ஆட வேண்டியது அவசியம். இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க களமிறங்கியுள்ள ஆஸ்திரேலியா 5/0 என்று ஆடி வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago