10 அணிகள் கலந்து கொள்ளும் ஏ டிவிஷன் லீக் வாலிபால்இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் நடத்தும் ஏ டிவிஷன் லீக் வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சுங்கரி வரித்துறை, இந்தியன் வங்கி, வருமானவரித் துறை, தமிழக காவல்துறை, ஐ.சி.எஃப், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், பனிமலர் பொறியியல் கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, சேப்பாக் பிரண்ட்ஸ் கிளப் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

போட்டிகள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறைமோதும். புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். இந்தத் தொடரில் கடைசி 4 இடங்களை பெறும் அணிகள் பி டிவிஷனுக்கு தகுதி இறக்கம் செய்யப்படும். கடந்த ஆண்டு பி டிவிஷனில் பட்டம் வென்ற சேப்பாக் பிரண்ட்ஸ் கிளப், 2-வது இடம் பிடித்த இந்தியன் வங்கி அணிகள் ஏ டிவினுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஏ டிவிஷன் சாம்பியன்ஷிப்பில் கடந்த ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதலிடமும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் 2-வது இடம் பிடித்திருந்தன. இம்முறை தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.3.50 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தக வலை சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் செயலாளர் ஏ.கே.சித்திரை பாண்டியன் தெரிவித்தார்.

தொடக்க நாளான இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வருமானவரித் துறை - சுங்கவரித் துறை அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் - பனிமலர் பொறியியல் கல்லூரி அணிகளும் இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியன் வங்கி - செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அணிகளும் மோதுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்