இலங்கை அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பல்லேகலயில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. லென்டல் சிம்மன்ஸ் 51 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 67 ரன்கள்விளாசினார். பிரண்டன் கிங் 33, நிக்கோலஸ் பூரன் 14, ஆந்த்ரே ரஸ்ஸல் 35, கேப்டன் கெய்ரன் பொலார்டு 34 ரன்கள் சேர்த்தனர்.
197 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணியானது 19.1 ஓவரில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக குசால் பெரேரா 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், வானிடு ஹசரங்கா 34 பந்துகளில் 44 ரன்களும் சேர்த்தனர்.
6 ஓவர்களில் இலங்கை 56 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் குசால் பெரேரா, ஹசரங்கா ஜோடி தாக்குதல் ஆட்டம் தொடுத்து 6-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது. ஆனால் இவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததும் தோல்வியை தவிர்க்க முடியாமல் போனது.
இன்று 2-வது ஆட்டம்
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஒஷேன் தாமஸ் 3 ஓவர்களை வீசி 28 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 2 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு இதே மைதானத்தில் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago