தென் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொண்டு ஆடிவரும் ஆஸ்திரேலியா அணி டி20 தொடரை வென்ற நிலையில் ஒருநாள் தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்று கைப்பற்றியது.
புளூம்ஃபாண்டேயினில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 271 ரன்களுக்கு சுருண்டது, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி பிரமாதமாக ஆடி 274/4 என்று வென்றது. பந்து வீச்சில் லுங்கி இங்கிடி 58 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்த பேட்டிங்கில் ஜே.என்.மலான் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 139 பந்துகளில் 129 ரன்களை எடுத்தார்.
கேப்டன் குவிண்டன் டீ காக் இந்தத் தொடரில் 3வது முறையாக மிட்செல் ஸ்டார்க்கிடம் பவுல்டு ஆகி டக் அவுட் ஆனார்.
லுங்கி இங்கிடி, வீழ்த்தியதில் டேவிட் வார்னர் (35), ஸ்டீவ் ஸ்மித் (13), லபுஷேன் (0), அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் ஆகர், கமின்ஸ் ஆகியோர் பெவிலியன் திரும்பினர். முதல் போட்டியில் சதம் எடுத்த ஹென்றிக் கிளாசன் இந்த இன்னிங்சில் அதிரடி 51 ரன்களை எடுத்தார். டேவிட் மில்லர் ஒருவழியாக மட்டையுடன் பந்தைத் தொடர்புறுத்தி 37 ரன்களை எடுத்தார். 9 பந்துகள் மீதமிருக்க தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
வரும் சனிக்கிழமை போட்செஃப்ஸ்ட்ரூமில் 3வது, கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. மலான் 124 பந்துகளில் சதம் எடுத்தார், ஆனால் 83 ரன்களி இருந்த போது ஸாம்ப்பா பந்தில் இவருக்கு கேரி கேட்சை விட்டார். 91, 81, 90 என்று மூன்று கூட்டணிகளை அமைத்தார் மலான்.
ஆஸ்திரேலியா தரப்பில் பிஞ்ச், டியார்க்கி ஷார்ட் இருவருமே தலா 69 ரன்கள் எடுத்தனர், வார்னர் (35), பிஞ்ச் கூட்டணி 50 ரன்களையும் ஷார்ட் - பிஞ்ச் ஜோடி 77 ரன்களையும், ஷார்ட், மிட்செல் மார்ஷ் (36) ஜோடி 66 ரன்களையும் சேர்த்தனர்.
ஆட்ட நாயகர்களாக லுங்கி இங்கிடி, மலான் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்
ஆனால் லுங்கி இங்கிடி ஆஸி.யை கட்டுப்படுத்தினார், ஆஸி.க்கு எதிராக 5 விக்கெட்டுகள் அல்லது 6 விக்கெட்டுகளை வீழ்த்திய 7வது தென் ஆப்பிரிக்க பவுலரானார்..
இங்கிடியின் சிறப்பு என்னவெனில் ஸ்மித், லபுஷேன் இருவரையும் அடுத்தடுத்து வீழ்ததிய இங்கிடியின் ஹாட்ரிக் வாய்ப்பை ஷார்ட் தடுத்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago