ஐசிசி டி20 மகளிர் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவில் போட்டிக்குப் போட்டி கலக்கி வரும் பதின்ம வயது வளரும் நட்சத்திரமான ஷஃபாலி வர்மா ஐசிசி டி20 பேட்ட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.
கடந்த 2018 அக்டோபர் முதல் முதலிடத்தை வைத்திருந்த நியூஸிலாந்து வீராங்கனை சூசி பேட்ஸ் என்ற வீராங்கனையை பின்னுக்குத்தள்ளி டாப் இடம் பிடித்தார் 16 வயதேயான ஷஃபாலி வர்மா.
மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இரண்டு இடங்கள் பின்னடைவு கண்டு 6ம் இடத்துக்கு வந்து விட்டார்.
டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை இந்திய அணி சந்திக்கிறது, இதில் பவுலிங் தரவரிசையில் டாப் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் ஸ்பின்னர் சோஃபி எக்லஸ்டோனை ஷஃபாலி வர்மா எதிர்கொள்வதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்தியா, இங்கிலாந்து அரையிறுதி வியாழனன்று நடைபெறுகிறது.
» மகளிர் டி 20 உலகக் கோப்பை- அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை சந்திக்கிறது
» டி20, ஒருநாள், டெஸ்ட்: ஆஸ்திரேலியாவின் அடுத்த கேப்டன் யார்? -மைக்கேல் கிளார்க் திடீர் அறிவிப்பு
நடப்பு டி20 உலகக்கோப்பையில் பெண் சேவாகாக வலம் வரும் ஷஃபாலி வர்மா தன் அதிரை ஆட்டத்தின் மூலம் 161 ரன்களை 4 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார். மிதாலி ராஜுக்குப் பிறகு டி20 டாப் இடம் பிடித்த மட்டையாளர் ஆனார் ஷஃபாலி.
அதே போல் பந்து வீச்சில் கலக்கி வரும் பூனம் யாதவ் 4 இடங்கள் முன்னேறி பவுலர் தரவரிசையில் 8-ம் இடம் பிடித்துள்ளார்.
டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 9 இடங்கள் முன்னேறி 7ம் இடத்துக்கு வந்துள்ளார். அணிகள் தரவரிசையில் 290 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும் 278 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2ம் இடத்திலும் உள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago