சேப்பாக்கத்தில் தோனி பயிற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பயிற்சியை தொடங்கினார்.

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் சுமார் 8 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி. இந்நிலையில் வரும் 29-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் டி 20 தொடரின் 13-வது சீசனுக்கு தயாராகும் விதமாக சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயிற்சியை தொடங்கினார் 38 வயதான தோனி.

அவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான அம்பதி ராயுடு, முரளி விஜய், பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, ஷாய் கிஷோர், என்.ஜெகதீசன் ஆகியோரும் பயிற்சியில் கலந்து கொண்டனர். மெதுவான ஓட்ட பயிற்சியில் ஈடுட்ட தோனி, அதன் பின்னர் பேட்டிங் பயிற்சிகள் மேற்கொண்டார். அப்போது தனது வழக்கமான பாணியில் சில பந்துகளை கேலரிகளை நோக்கி விளாசினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அளவிலான பயிற்சி முகாம் வரும் 19-ம் தேதி முதல் நடைபெறும் என அணி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்