என்ன? பிரச்சினை செய்ய வேண்டும் என்றே வருகிறீர்களா? - நியூஸி. பத்திரிகை நிருபரிடம் கோலி ஆவேசம்

By பிடிஐ

ஏற்கெனவே தோல்வியினால் கோபத்தில் இருக்கும் இந்திய கேப்டன் விராட் கோலியிடம் நியூஸிலாந்து பத்திரிகை நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வி அவரை மேலும் எரிச்சலடையச் செய்ய அவரிடம் சில வார்த்தைகளைக் கோபமாகப் பேசினார் விராட் கோலி.

நியூஸிலாந்து அணியின் கேட்பன் கேன் வில்லியம்சன் முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்து சென்ற போது விராட் கோலி அசிங்கமாக சில சேட்டைகளைச் செய்து, ரசிகர்களை நோக்கி வாயைமூடுமாறு செய்கை செய்தார். இது சர்ச்சையானது. இந்நிலையில் இப்போது ஒயிட்வாஷ் எரிச்சலில் கோலி இருக்கும் போது நியூஸிலாந்து நிருபர் ஒருவர் கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்த போது கோலியின் செய்கையைக் குறிப்பிட்டு, “என்ன நினைக்கிறீர்கள்? நான் உங்களிடம் கேள்வி கேட்டுள்ளேன் நீங்கள் பதிலளிக்க வேண்டும்” என்றார்.

இதனையடுத்து கடும் கோபமடைந்த விராட் கோலி அந்த நிருபரை நோக்கி, “இதற்கு பதில் வேண்டுமெனில் நீங்கள் இன்னும் நல்ல கேள்வியுடன் வரவேண்டும். அரைகுறை கேள்விகள், அரைகுறை விவரங்களுடன் நீங்கள் இங்கு வந்திருக்கக் கூடாது, நீங்கள் இதன் மூலம் பிரச்சினை செய்ய வேண்டுமென்றால், சர்ச்சைகளைக் கிளப்ப வேண்டுமென்றால் அதற்கு இது சரியான இடம் இல்லை.

நான் ஆட்ட நடுவரிடம் இது குறித்து பேசி விட்டேன். என்ன நடந்ததோ அது குறித்து அவருக்கு ஒன்றும் பிரச்சினையில்லை” என்று கோலி கோபத்துடன் பதிலளித்தார்.

கேன் வில்லியம்சனிடம் இது குறித்து கேட்ட போது, “இதுதான் விராட், அவர் ஆட்டத்தை அவ்வளவு பற்றுதலுடன் ஆடுகிறார். இதைப்போய் யாராவது பெரிது படுத்துவார்களா” என்று கோலிக்கு ஆதரவாகப் பதில் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்