வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் உத்தி சரியில்லை என்று கூறப்பட்ட பிரிதிவி ஷா இன்று கிறைஸ்ட்சர்ச்சில் துல்லியமான உத்தியுடன் நியூஸியின் கடினமான பந்து வீச்சை பிரமாதமான ஆக்ரோஷத்துடன் ஆடி அரைசதம் கண்டார்.
இந்திய அணி இன்று இன்னும் சுமார் 52 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்புகு 135 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது, புஜாரா, விஹாரி ஆடிவருகின்றனர்.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. வெலிங்டன் டெஸ்ட்டில் பிரிதிவி ஷா கால் நகரவில்லை, ஷார்ட் பிட்ச் பந்தும் பிரச்சினைகள் கொடுத்தன. பிட்ச் பசுந்தரையாக இருந்தாலும் அதன் அடியில் வன்மை இல்லாததால் பெரிய வேகம் இல்லை, ஸ்விங்கும் பேசின் ரிசர்வ் போல் இல்லை, காற்று அங்கு போல் இங்கு இல்லை.
இதனால் பிரிதிவி ஷா காலை நீட்டி வெளுத்து வாங்கினார், ஷார்ட் ஆஃப் லெந்த் பந்துகளை பின்னால் சென்று பஞ்ச் செய்தார். சவுத்தியை முன்காலிலும் பின் காலிலும் சென்று 3 பவுண்டரிகளை ஷா விளாச ஸ்கோர் 5 ஓவர்களில் 26/0 என்று நல்ல தொடக்கம் ஆனது.
மயங்க் அகர்வால் ஒரு பவுண்டரியுடன் 11 பந்துகளைச் சந்தித்து 7 ரன்களில் வெளியேறினார், ட்ரெண்ட் போல்ட் அவரை ‘ஒர்க் அவுட்’ செய்தார். அதாவது உடலுக்குக் குறுக்காக பந்தை சில முறை வெளியே எடுத்து கடைசியில் ஒரு இன்ஸ்விங்கிங் யார்க்கர் லெந்த் பந்தை வீச இடது காலை துருத்திக் கொண்டு முன்னே நகர்த்தி எல்.பி.ஆனார் மயங்க் அகர்வால். ரிவியூ ஒன்றையும் காலி செய்து விட்டு பெவிலியன் திரும்பினார்.
வெலிங்டனில் கொலின் டி கிராண்ட் ஹோமின் ஜெண்டில் மீடியம் வேகப்பந்து வீச்சை இந்திய அணியினர் மெய்டன்களாக்கினர், ஆனால் இம்முறை பிரிதிவி ஷா அவரை பதம் பார்த்து அவரது 2 ஓவர்களில் 3 பவுண்டரிகளை விளாசினார். கடந்த போட்டியில் மணிக்கு 130கிமீ வேகம் மட்டுமே வீசிய 6 அடி 8 அங்குல உயர கைல் ஜேமிசன் இந்த டெஸ்ட்டில் காற்றின் துணை இல்லாததால் வேகத்தைக் கூட்டி 135-137 கிமீ வேகம் வீசி படுத்தினார், ஆனால் இவரையும் பாசிட்டிவாகவே ஆடினார்.
19வது ஓவரில்தான் இடது கை ஷார்ட் பிட்ச் ஸ்பெஷலிஸ்ட் நீல் வாக்னர் வந்தார். டீப் ஸ்கொயர்லெக்கில் பீல்டர், டீப் மிட்விக்கெட்டில் பீல்டர் என்று நிறுத்தி வைத்து பவுன்சர் வீசினார் பிரிதிவி ஷா அசரவில்லை ஹூக் ஆடி கைல் ஜேமிசன் தலைக்கு மேல் ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் விளாசினார். சிக்சரில் தன் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார் ஷா.
ஆனால் 64 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசிய பிரிதிவி ஷா, கைல் ஜேமிசன் வீசிய ஆட வேண்டியத் தேவையில்லாத ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஃபுல் லெந்தில் சென்ற பந்தை ட்ரைவ் ஆடினார், பந்து ஸ்லிப்பில் தலைக்கு மேல் எழும்பியது, கடினமான அந்த கேட்சை டாம் லேதம் ஒரே எம்பு எம்பி ஒருகையில் பிடித்தார் மிகவும் அபாரமான கேட்ச் அது. ஷா மட்டையை ஏந்தவில்லை, முழு ஆக்ரோஷத்துடன் அதை அடித்தார் அதனால் அடர்த்தியான எட்ஜ் பறந்தது, ஆனால் டாம் லேதம் பெரிய கேட்சைப் பிடிக்க இந்திய அணி 2வது விக்கெட்டை இழந்தது.
விராட் கோலிக்கு வழக்கம் போல்தான் குட்லெந்தில் பிட்ச் செய்து வெளியே எடுக்குமாறு சில பந்துகள் பிறகு அதே இடத்தில் பிட்ச் செய்து உள்ளே ஸ்விங் செய்வது, அதே போல் இம்முறையும் சவுத்தி செய்ய கோலி எல்.பி.ஆகி வெளியேறினார், 15 பந்துகளில் 3 ரன்கள். ரிவியூ செய்து பார்க்கலாம் என்ற முயற்சியும் வீணாக ரிவியூதான் பறிபோனது, 2 ரிவியூக்களும் காலி, இனி புதிய பந்து எடுக்கும் போதுதான் ரிவியூ கிடைக்கும் அதற்குள் ஆல்அவுட் ஆகாமல் இருக்க வேண்டுமே.
ரஹானேவுக்கும் சவுத்தி அருமையாக வைடு ஆஃப் த கிரீசிலிருந்து அவுட்ஸ்விங்கர் வீச அதுவரை ஆடாமல் விட்ட ரஹானே தொட்டார், கெட்டார். 7 ரன்களில் வெளியேறினார். டெய்லர் கேட்ச் எடுத்தார். புஜாரா 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களுடனும் விஹாரி ஒரு கேட்சை வாட்லிங் விட்ட நிலையில் 9 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி 135 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago