மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் (ரோஜர் கோப்பை) டென்னிஸ் போட்டி யில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜப்பானின் நிஷி கோரி, பிரிட்டனின் ஆன்டி முர்ரே உள்ளிட்டோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஜோகோவிச் தனது காலிறுதியில் 5-7, 7-6 (7), 6-1 என்ற செட் கணக்கில் லத்வியாவின் எர்னஸ்ட் குல்பிஸைத் தோற் கடித்தார். ஜோகோவிச் தனது அரையிறுதியில் பிரான்ஸின் ஜெர்மி சார்டியை சந்திக்கிறார். சார்டி தனது காலிறுதியில் கடும் போராட்டத்துக்கு பிறகு 6-7 (9), 7-6 (13), 7-6 (4) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை வீழ்த்தினார். மாஸ்டர்ஸ் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் சார்டி.
நடால் தோல்வி
மற்றொரு காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் நிஷிகோரி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் நடால் 6 ‘டபுள் பால்ட்’ தவறுகளை செய்தார். இதற்கு முன்னர் நடாலிடம் 7 முறை தோல்வி கண்டுள்ள நிஷிகோரி, முதல்முறையாக அவரை வீழ்த்தியுள்ளார்.
நிஷிகோரி தனது காலிறுதியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை சந்திக்கிறார். போட்டித் தரவரிசை யில் 2-வது இடத்தில் இருக்கும் முர்ரே தனது காலிறுதியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜோ-வில்பிரைட் சோங்காவை தோற்கடித்தார். இதன்மூலம் கடந்த முறை அரையிறுதியில் சோங்காவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ரோஜர் கோப்பை போட்டியின் மகளிர் பிரிவு காலிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லி யம்ஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் களில் இத்தாலியின் ராபர்ட்டா வின்ஸியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அடுத்ததாக ஸ்விட்சர்லாந்தின் பெலின்டா பென் சிச்சை சந்திக்கிறார் செரீனா. பென்சிச் தனது காலிறுதியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் செர்பியாவின் அனா இவானோவிச்சுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
மற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் சைமோனா ஹேலப்பும், இத்தாலி யின் சாரா எர்ரானியும் மோதவுள் ளனர். ஹேலப் தனது காலிறுதியில் 0-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவையும், எர்ரானி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் உக்ரைனின் லீஸாவையும் வீழ்த்தினர்.
அரையிறுதியில் சானியா ஜோடி
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஹாவ் சிங் சான்-யங் ஜான் சன் ஜோடியை தோற்கடித்தது. சானியா ஜோடி தங்களின் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் கரோலின் கிரேஸியா-ஸ்லோவேனியாவின் கேத்தரினா போட்னிக் ஜோடியை சந்திக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago