வங்கதேசத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் 6 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100-வது பிறந்த நாள் நினைவாக 2 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடர் நடத்தப்படுகிறது. உலக லெவன் அணி மற்றும் ஆசிய லெவன் அணி ஆகிய இரு அணிகள் மார்ச் 18 மற்றும் 21-ம் தேதிகளில் மோதுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேதிகள் உறுதி செய்யப்படவில்லை.
இதில் ஆசிய லெவன் அணியில் இடம் பெறும் இந்திய வீரர்கள் உள்பட 15 வீரர்கள் குறித்த பெயர்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்திய அணி சார்பில் கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷிகர் தவண், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரிஷப் பந்த் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கே.எல்.ராகுல் ஒருபோட்டியில் மட்டுமே ஆடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, விராட் கோலி பெயர் அறிவிக்கப்பட்ட போதிலும், அது கடைசி நேரத்தில் மாறுதலுக்கு உட்பட்டது.
» இந்தியா-பாக் கிரிக்கெட்; மோடி ஆட்சியில் இருக்கும் வரை உறவுகள் முன்னேறாது: ஷாகித் அப்ரிடி தாக்கு
தற்போது நியூஸிலாந்து பயணத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டியிருக்கிறது.
இந்தத் தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் இந்திய அணி மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் உள்நாட்டில் விளையாடுகிறது.
மார்ச் 12-ம் தேதி தர்மசாலாவிலும், லக்னோவில் 15-ம் தேதியும், மார்ச் 18-ம் தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது. அடுத்த 10 நாட்களில் ஐபிஎல் போட்டி 29-ம் தேதி தொடங்கிவிடும். இந்த நெருக்குமான தேதிகளுக்கு இடையே இந்திய வீரர்கள் ஆசிய லெவனில் விளையாடுகின்றனர்.
வங்கதேச அணியில் தமிம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் ஆசிய லெவன் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், பாகிஸ்தான் அணி வீரர்களில் ஒருவர் கூட ஆசிய லெவன் அணியில் இடம் பெறவில்லை. இலங்கை அணியில் இருந்து லசித் மலிங்கா, திசாரா பெரேரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து ரஷித் கான், முஜிபுர் ரஹ்மானும், நேபாள அணியில் இருந்து சந்தீப் லாமிசானேயும் இடம் பெற்றுள்ளனர்.
ஆசியலெவன் அணி விவரம்:
கே.எல். ராகுல், ஷிகர் தவண், தமிம் இக்பால், விராட் கோலி, லிட்டன் தாஸ், ரிஷப் பந்த், முஷ்பிசுர் ரஹ்மான், திசாரா பெரேரா, ரஷித் கான், முஸ்தபிசுர் ரஹ்மான், சந்தீப் லாமிசானே, லசித் மலிங்கா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், முஜிப் உர் ரஹ்மான்.
உலக லெவன் அணி விவரம்:
அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் கெயில், டூபிளசிஸ் (கேப்டன்), நிகோலஸ் பூரன், பிரன்டன் டெய்லர், ஜானி பேர்ஸ்டோ, கெய்ரன் பொலார்ட், அதில் ரஷித், ஷெல்டன் காட்ரெல், லுங்கி இங்கிடி, ஆன்ட்ரூ டை, மிட்ஷெல் மெக்லநகன்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago