வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் 55 ஓவர்களையே இந்திய அணி ஆட முடிந்தது, அதன் பிறகு மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
ஆட்ட முடிவில் அருமையாக ஆடி வரும் ரஹானே 38 ரன்களுடனும் சில ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பந்த் 10 ரன்களுடமும் முதல் நாள் ஆட்ட முடிவில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். நாளை 2ம் நாள் ஆட்டம் இன்று போலவே காலை 4 மணிக்குத் தொடங்கும் (உள்ளூர் நேரம் 11.30), நாளை 98 ஓவர்கள் கொண்ட தினமாக இருக்கும்.
முதல் நாள் ஆட்டம் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் கைல் ஜேமிசனுக்கு உரியது, புஜாராவை மிக அருமையான ஒரு பந்தில் எட்ஜ் ஆக வைத்த ஜேமிசன் பிறகு கேப்டன் விராட் கோலியை ‘ஒர்க் அவுட்’ செய்து வீழ்த்தி மீண்டும் ஒரு அருமையான பந்தில் விஹாரியை (7) வீழ்த்தி 14 ஓவர் 2 மெய்டன் 38 ரன்கள் 3 விக்கெட் என்று அசத்தினார், இவர் பவுலிங் வேகம் 130-131 கிமீ தான். ஆனால் 6 அடி 8 அங்குலத்திற்கு மேலாக கையை தூக்கி பந்தை இறக்கும் போது அசவுகரியமான லெந்தில் அசவுகரியமான உயரத்தில் பந்து வருகிறது. இவரை வேறு மாதிரி பேட்டிங் அணுகுமுறையில்தான் கையாள முடியும்.
இன்று காலை புதிய பந்தில் புதுப் பிட்சில் நியூஸிலாந்தின் பவுலர்கள் டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட் வீச்சில் ஆக்ரோஷம் இல்லை. ஸ்விங்கும் இல்லை. நேற்று பசுந்தரையாக இருந்த பிட்ச் இன்று பிரவுன் நிறமாக இருந்தது. ஆனால் பேட்டிங் இங்கு சுலபமல்ல, ஏனெனில் பந்து எதிர்பார்த்ததை விட மெதுவாக வருகிறது, பிட்சின் மேல்பரப்பு ஆஸ்திரேலியா போல் இல்லாமல் மென்பரப்பாக இருப்பதால் ஒரு டென்னிஸ் பந்து பவுன்ஸ் இருந்தது.
» மகளிர் டி 20 உலகக் கோப்பை: வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? - ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை
» வெலிங்டன் டெஸ்ட்: புஜாரா, கோலியை விரைவில் வெளியேற்றிய கைல் ஜேமிசன்- இந்தியா திணறல்
காயத்திலிருந்து வந்த ட்ரெண்ட் போல்ட் கடும் ஏமாற்றமளித்தார். இவர் ஷார்ட் ஆஃப் லெந்தில் வீசிய பந்துகள் நன்றாக இருந்தன, ஆனால் மற்றபடி அவர் பவுலிங்கில் அச்சுறுத்தல் எதுவும் இல்லை ஒரு முறை பிரிதிவி ஷாவுக்கும் அகர்வாலுக்கும் மட்டையின் உள்விளிம்பில் பட்டுச் சென்றது, ஒரு பந்து ஷாவின் மட்டை வெளி விளிம்பில் பட்டு பவுண்டரி சென்றது, அகர்வாலுக்கு ஒரு பந்து ஏறக்குறைய எட்ஜையும் மிஸ் செய்து ஸ்டம்பையும் மிஸ் செய்து சென்றது. .
சவுத்தி வழக்கம் போல் எளிதாக ஆடிவிடலாம் போல் தெரியும் ஆனால் கடினமான பந்து வீச்சு அது, பவுண்டரி பந்துகள் குறைவு, ஒரேயொரு முறை ஷார்ட் பிட்ச் வீச பிரிதிவி ஷா அதனை பாயிண்ட் மேல் தூக்கி பவுண்டரிக்கு அனுப்பினார். பிறகு போல்ட் பந்தில் ஒரு எட்ஜ் பவுண்டரி.
தளர்வான பந்துகளில் ரன்களை எடுப்பதில் வல்லவரான ஷா 18 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிலையில் சவுத்தி ஒரு பந்தை ஆஃப் வாலி லெந்தில் காற்றில் உள்ளே கொண்டு வந்து சற்றே வெளியே ஸ்விங் செய்தார், பிரிதிவி ஷா கால்கள் நகரவில்லை, பெரும்பாலும் பேக் அண்ட் அக்ராஸ் வீரரான ஷா, இம்முறை முன் காலைத் தூக்கிப் போட்டு மட்டையுடன் வந்து ஆடியிருக்க வேண்டும், ஆனால் மட்டையை மட்டும் நீட்டினார், கால் நகர்தல் இல்லை. கிளீன் பவுல்டு ஆனார்.
புஜாரா இறங்கி சவுத்தியின் சபலம் ஏற்படுத்தும் பந்துகளை ஒருவாறு எதிர்கொண்டு ஆடி வந்த நிலையில் ஒரு புல்டாஸை முறையாக பவுண்டரிக்கு அனுப்பினார்.
கொலின் டி கிராண்ட் ஹோம் வீச வந்த போது அவரது 122-125 கிமீ வேகப்பந்துகளினால் சிரமம் ஏற்பட்டது, காரணம் அவரது லெந்த் பவுண்டரி அடிக்க முடியாதது, மெதுவாக வந்தாலும் டைட் லெந்த். நியூஸிலாந்தில் இப்படிப்பட்ட பவுலர்கள் எப்போதும் இருப்பார்கள், முன்பு கெவின் லார்சன் என்பவர் இருந்தார், அடிக்கவே முடியாது, அதே போல்தான் கொலின் டி கிராண்ட் ஹோம், இவரது ஒரு பந்து உள்ளே வர புஜாரா ஆடாமல் விட அது பெரிய எல்.பி.முறையீடானது, அபாயகரமான ஆட்டம், எஸ். வெங்கட்ராகவன் நடுவராக இருந்தால் வேண்டுமென்றே கால்காப்பில் ஆடியதற்காக அவுட் கொடுத்திருப்பார்.
கைல் ஜேமிசன் வந்தார் பெரிய வேகம் இல்லை 130 கிமே பக்கம்தான் வீசுகிறார், ஆனால் அவரது உயரம் அவர் வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீசும் கோணம், அனைத்திற்கும் மேலாக அவர் பந்தை பிட்ச் செய்யும் இடத்திலிருந்து அவருக்கு கிடைக்கும் பவுன்ஸ் ஆகியவை அவரை வித்தியாசமான பவுலராக்கியுள்ளது. முதல் ஓவரிலேயே அனுபவ புஜாராவை கதிகலக்கும் ஒரு பந்தை வீச அந்த பந்து மட்டையின் விளிம்பையும் மிஸ் செய்து ஸ்டம்பையும் மிஸ் செய்தது.
இப்படிப்பட்ட இன்னொரு பந்தில்தான் ஜேமிசன் பந்தை குட் லெந்தில் சற்றே வைட் ஆஃப் த கிரீசிலிருந்து வீசி உள்ளே காற்றில் கொண்டு வந்து வெளியே எடுத்தார், புஜாரா நிலை மாறினார், ஸ்கொயர் ஆனார், விளையாட முடியாத ஒரு பந்து, அதுவே மட்டையின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் எளிதான கேட்ச் ஆனது. 42 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் அவர் 11 ரன்களில் வெளியேறினார். ஒரு முனையில் கொலின் டி கிராண்ட் ஹோமை ஒன்றுமே செய்ய முடியவில்லை.
விராட் கோலி வந்தார். 7 பந்துகள்தான் நின்றார் 2 ரன்கள் எடுத்து கைல் ஜேமிசன் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்திற்கு தனது வழக்கமான ட்ரைவுக்குச் சென்றார், சபலத்தில் மட்டை நீள விளிம்பில் பட்டு 100வது டெஸ்ட் ஆடும் டெய்லரிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது, ஜேமிசனுக்கு ஒரு கனவு டெஸ்ட் அறிமுகமாக அமைந்தது, இந்திய அணியின் இரண்டு டாப் பேட்ஸ்மென்களை அவர் மலிவாக வீழ்த்தினார். காரணம் போல்ட் சரியாக வீசவில்லை. உணவு இடைவேளையின் போது 79/3 என்று இந்திய அணி தடுமாறினாலும் ரஹானே, அகர்வால் நம்பிக்கை அளிப்பது போல் பேட் செய்தனர்.
ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு 34 ரன்களுக்கு 5 பவுண்டரிகளுடன் அருமையான ஒரு டெஸ்ட் இன்னிங்சை ஆடி வந்த மயங்க் அகர்வால் பொறுமையின்றி போல்ட் வீசிய லெக் திசை ஷார்ட் பிட்ச் பந்தை அரைகுறை புல் ஷாட் ஆடி டீப்பில் கைல் ஜேமிசனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். 88/4 ஆனது.
குளிர்பான இடைவெளிக்குப் பிறகு கைல் ஜேமிசன் மீண்டும் வந்து புஜாராவுக்கு வீசிய அதே போன்ற பந்தை வீச விஹாரி எட்ஜ் ஆகி வெளியேறினார். ரஹானே வந்தது முதல் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்ட நினைத்தார், இரண்டு ஸ்ட்ரெட்ய் ட்ரைவ் பவுண்டரிகள் கிளாஸ் ரகம், அதன் பிறகு ஒழுங்கான டெஸ்ட் இன்னிங்ஸிற்கு அவர் செட்டில் ஆகியுள்ளார். ஒரேயொரு முறை ஜேமிசனின் பவுன்சர் ஒன்று ஷார்ட் ஆஃப் லெந்திலிருந்து எகிற மட்டையை முகத்திற்கு உயர்த்த பந்து கிளவ்வில் பட்டு எங்கு சென்றது என்று ரஹானேவுக்கே தெரியவில்லை, நல்ல வேளையாக அது பீல்டர் கையில் கேட்சாகவில்லை. 28 பந்துகளில் 17 என்று ஆக்ரோஷம் காட்டிய ரஹானே பிறகு 122 பந்துகளில் 38 என்று கட்டப்பட்டார்.
கொலின் டி கிராண்ட் ஹோம் தன் வேலையை படுபிரமாதமாகச் செய்து 11 ஓவர் 5 மெய்டன் 12 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார். ரிஷப் பந்த் ஒரு புல்ஷாட் பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு 37 பந்துகள் என்று இதுவரை பொறுமை காட்டி ஆடிவருகிறார். நாளை பார்ப்போம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago