இந்திய அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
33 வயதாகும் பிரக்யான் ஓஜா கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு மும்பையில் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் விளையாடவில்லை.
கடந்த 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கான்பூர் டெஸ்ட்டில் அறிமுகமான பிரக்யான் ஓஜா, 5 ஆண்டுகள் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பிரக்யான் ஓஜா அறிமுகமானார். 4 ஆண்டுகள் வரை 2012-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். 18 ஒருநாள் போட்டியில் விளையாடிய ஓஜா 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 6 டி20 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
» வினய் நலமாக இருக்கிறார்; அவருடைய வழக்கறிஞருக்குத் தான் ஓய்வு தேவை: நிர்பயா தாயார் சாடல்
» ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் விசாரணை- சிபிஐ, அமலாக்க துறைக்கு மே 4 வரை அவகாசம்
இந்திய அணிக்காக 5 ஆண்டுகள் விளையாடியுள்ள பிரக்யான் ஓஜா பெரும்பாலும் டெஸ்ட் போட்டியில் விளையாடித்தான் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச மற்றும் முதல்தரக் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரக்யான் ஓஜா அறிவித்துள்ளார்.
பிரக்யான் ஓஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், " சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக நான் பிசிசிஐ அமைப்புக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். நாட்டுக்காக ஒரு இந்தியனாக நான் விளையாட வேண்டும் என்பது நீண்டகாலக் கனவு. இளம் வயதிலேயே அது நிறைவேறியது. அதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் விளையாடிய காலத்தில் என் சக வீரர்களிடம் அதிகமான மரியாதையையும், அன்பையும் பெற்றுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டில் பிரக்யான் ஓஜா பந்து வீசுவது சந்தேகத்துக்குரிய வகையில் இருக்கிறது என்று நடுவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, பந்துவீச்சை சரி செய்யும் பயிற்சியில் ஈடுபட்டு அதற்கான தகுதித்தேர்வில் தேறி மீண்டும் 2015-ம் ஆண்டில் ஓஜா விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago