ஸ்குவாஷ் தரவரிசை: தீபிகா மீண்டும் டாப் 10

By செய்திப்பிரிவு

சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார்.

12-வது இடத்தில் இருந்த அவர் இரு இடங்கள் முன்னேறி 10-வது இடம் பிடித்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா இறுதி ஆட்டம் வரை முன்னேறினார். இதனால் தரவரிசையில் அவர் ஏற்றத்தை சந்தித்துள்ளார். முன்னதாக 2012-ம் ஆண்டில் தீபிகா முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் வந்தார்.

இது குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அவர், “தரவரிசையில் முன்னேற்றம் என்பது எப்போதுமே உற்சாகம் அளிக்கும் விஷயம். தொடர்ந்து சிறப்பாக விளையாடி முதல் 5 இடங்களுக்கு வர முயற்சிப்பேன். தரவரிசையில் முதலிடம் பிடிப்பதே இறுதி இலக்கு” என்று கூறினார்.

மற்றொரு இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா தொடர்ந்து 21-வது இடத்தில் உள்ளார். மலேசியாவின் நிக்கோல் டேவிட் தொடரந்து 94-வது மாதமாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்