'ஹாட்ரிக்' வெற்றியுடன் ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியூஸி.: இந்திய மிடில்ஆர்டர் சொதப்பல்; ஜடேஜா, ஷைனி போராட்டம் வீண்

By க.போத்திராஜ்

ஜேமிஸன், சவுதி ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் ஆக்லாந்தில் பகலிரவாக நடந்த 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஒருநாள் தொடரை வென்றது நியூஸிலாந்து அணி.

முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது. 274 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

நியூஸிலாந்து அணியில் அறிமுகமாகிய 6.8 அடி உயரமுள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜேமிஸன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

உலகக்கோப்பை அரையிறுதியில் இருந்து தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி பெறும் ஹாட்ரிக் வெற்றியாகும். அதேசமயம், டி20 தொடரை இழந்ததற்கு இந்திய அணியை பழிதீர்த்துக் கொண்டது நியூஸிலாந்து அணி.

கேப்டன் வில்லியம்ஸன், பெர்குஷன், டிரன்ட் போல்ட் ஆகிய முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் ஒருநாள் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது நியூஸிலாந்து அணி.

இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான பிரித்வி ஷா(24), அகர்வால்(3), விராட் கோலி(15), ராகுல்(4), கேதார்ஜாதவ்(9) போன்ற ஸ்பலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் மோசமான ஷாட்களை ஆடிய தோல்விக்கு முக்கியக்காரணமாகக் கூறலாம். அதேசமயம், டெய்லண்டர்களான ரவிந்திர ஜடேஜா, ஷைனியின் ஆட்டம் உண்மையில் பிரமிக்கவைக்கும் விதத்தில் இருந்தது.

வேகப்பந்துவீச்சாளராக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருந்த ஷைனி இந்த ஆட்டத்தில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உள்ளிட்ட 45 ரன்கள் சேர்த்து நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.

ரவிந்திர ஜடேஜா தன்னை ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தன்னை ஆல்ரவுண்டர் என்பதை அழுத்தமாக பதிவு செய்து வருகிறார். தன்னை அணியில் இருந்து எடுக்க முடியாத அளவுக்கு பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கிலும் முத்திரை பதித்து வருகிறார். பந்துவீச்சில் மிகச்சிக்கனமாக ரன்கள் வழங்கும் ஜடேஜா, தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்து வருகிறார்.

உலகக்கோப்பைப் போட்டியில் நடந்த அரையிறுதிப் போட்டியைப் போன்று மற்றொரு அரையிறுதிப் போட்டி போன்றதான் இது அமைந்திருந்தது. ஆனால், இதில் தோனி மட்டும்தான் மஸ்ஸிங் என்ற நினைப்பு இருந்தது.

அதிலும் இந்திய அணி 153 ரன்களுக்கு 7விக்கெட்டுகளை எடுத்து திணறியபோது, ஷைனியும், ஜடேஜாவும் சேர்ந்து அமைத்துக் கொடுத்த பாட்னர்ஷிப் மிக அருமை. இருவரின் ஆட்டமும், நியூஸிலாந்து அணியிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், ஷைனியின் விக்கெட் வீழ்ந்தது ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ராகுல், கோலி, பிரித்விஷா, அகர்வால், ஜாதவ் ஆகியோரின் பேட்டிங் தோல்வியே அணியின் தோல்விக்கு காரணமாகியது

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை 6.8 அடி உயரமுள்ள ஜேமிஸன், சவுதி, கிராண்ட்ஹோம், பென்னட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர்(52), ரவிந்திர ஜடேஜா 55, ஷைனி 45 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முன்னதாக நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. கப்தில் (79), நிகோல்ஸ் (41) இணைந்து 16.5 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 93 ரன்களைச் சேர்த்தனர். அதன் பிறகு 142/1 என்ற நிலையிலிருந்து அடுத்த 55 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை நியூஸிலாந்து பறிகொடுத்தது.
இதற்கு ஷர்துல் தாக்கூரின் அபார பீல்டிங்கினால் ஒரு ரன் அவுட்டும், ஜடேஜா மிகப்பிரமாதமாக ஒருகையில் நேராக ஸ்டம்பை அடித்து நீஷமை ரன் அவுட் செய்ததும் காரணமாகும். இதுதவிர சாஹல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜடேஜா அதி முக்கிய விக்கெட்டான டாம் லேதமை எல்.பி. செய்ய நியூஸிலாந்து வீழ்ச்சியின் விளிம்பில் இருந்தது.

ராஸ் டெய்லர் நியூஸிலாந்து அணி 8வது விக்கெட்டை 197 ரன்களில் இழக்கும் போது 47 பந்துகளில் 29 ரன்கள் என்று இருந்தவர் கடைசியில் 74 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 73 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

மார்டின் கப்தில் தொடக்கத்தில் அபாரமான சில ஷாட்களை ஆடினார். பும்ரா 10 ஓவர்களில் 64 ரன்களை விட்டுக் கொடுத்ததில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார், இதில் 25 டாட் பால்கள் என்றால் 60 பந்துகளில் 25 பந்துகள் ரன் இல்லை, மீதி 35 பந்துகளில் 64 ரன்கள் என்பது கிட்டத்தட்ட பந்துக்கு 2 ரன்கள் பக்கம் கொடுத்துள்ளார், அதாவது ஸ்மார்ட் சிக்கன விகிதத்தின் படி பார்த்தால், 25 டாட்பால்களை வீசியவர் 35 பந்துகளில் 64 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது.

இவரைவிடவும் ஷர்துல் தாக்குர் இன்று நன்றாக வீசினார், முதல் போட்டியை ஒப்பிடும் போது தாக்குர் முதல் ஸ்பெல்லை நன்றாகவே வீசினார் ஆனால் கடைசியில் அவரும் 10 ஓவர் 1 மெய்டன் 60 ரன்கள் 2 விக்கெட் என்று ஆனார். 60 பந்துகளில் 34 டாட்பால்களை வீசியவர் 26 பந்துகளில் 60 ரன்கள் என்பது 200%ஐயும் தாண்டிய ஸ்ட்ரைக் விகிதமாகும். இதுவும் மோசமான திட்டமிடல் இல்லாத பந்து வீச்சே.

நவ்தீப் சைனி தன் வேகத்தினால் மிரட்டினார் மணிக்கு 144-145 கிமீ வேகத்தில் வீசி அவர் 10 ஒவர் 48 ரன்களையே கொடுத்தாலும் ஸ்மார்ட் விகிதத்தின் படி 36 டாட்பால்களை நீக்கி விட்டு பார்த்தால் 24 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 48 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

சாஹல் 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் பிக் ஆஃப் த பவுலர் என்று பார்த்தால் ஜடேஜாதான் 10 ஓவர் 35 ரன் 1 விக்கெட். 34 டாட்பால்களை கழித்து விட்டால் 26 பந்துகளில் 35 ரன்களையே விட்டுக் கொடுத்துள்ளார், இதுதான் பார்முலா. இப்படி அனைவரும் வீசியிருந்தால் நியூஸிலாந்து அணி 200-220 ரன்கள்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்